2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கோழிகளை வளர்ப்பதற்கு செலவு அதிகம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 வருடங்களுக்கு முன்னர் 2.5 கிலோகிராமாக இருந்த இலங்கையின் வருடாந்த தேசிய கோழி இறைச்சி நுகர்வு, தற்போது 8.2 கிலோகிராமாக அதிகரித்துள்ளதுடன் எதிர்காலத்தில் 10 கிலோகிராமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இக்காலப் பகுதியில் கோழி இறைச்சி நுகர்வானது 3 மடங்காக அதிகரித்த போதிலும் அதன் விலைகளில் கிட்டத்தட்ட வித்தியாசம் இல்லாமல் உள்ளது என இலங்கையின் கோழி வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களது உற்பத்தி, செயலாக்கம், மற்றும் விநியோகித்தல் முறைகளில் கையாண்ட சிறந்த முறைகளே இதற்கு காரணமாகும் என தெரிவித்துள்ள இலங்கை கோழி வளர்ப்பாளர்கள், கோழி வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் தாம் கையாண்ட சர்வதேச தரத்திலான செயற்பாடுகள் காரணமாக குறைந்த செலவில் கோழி உற்பத்தியில் அதிகரிப்பும் அதே நேரத்தில் நுகர்வோருக்கு சென்றடைய கூடியதாகவும் இருந்துள்ளது என இலங்கை கோழி வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனபோதிலும் அதிகரித்து வரும் உற்பத்தி செலவினதுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக கோழி உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர்.

மொத்த உற்பத்தி செலவின் 70 சதவீதம் கோழிக்கான தீன் செலவினமாகும். கோழி தீன் உணவிற்காக அரிசி, சோளம், சோயா மற்றும் சம அளவிலான புரதச்சத்து என்பன தேவைப்படுகின்றன. கோழி தீன் உற்பத்தியின் செலவை குறைப்பதற்கான செயற்பாடுகள் குறிப்பாக அமினோ அமிலம் போன்றவற்றை சேர்க்காமல் விடுதல் கோழிகளின் எடையை குறைக்கச் செய்யும். ஆனபோதிலும் செலவைக் குறைப்பதற்காக இவ்வாறானச் செயற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.

எவ்வாறெனினும் அதிக அளவிலான வரி விதிப்புகளும் கோழி உற்பத்தியாளர்களைத் தாக்குகின்றது. இதே துறையில் உள்ள ஏனையவர்களுடன் ஒப்பிடும் போது கோழி இறைச்சி உற்பத்தியாளர்களே NBT மற்றும் VAT   வரிகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

தேசிய பொருளாதார வளர்ச்சியில் கோழி உற்பத்தி வகிக்கும் பங்கைப் பார்க்கும் போது இது மாறாக இருக்கும். அந்நிய செலாவணியைப் பாதுகாக்க உதவும் துறையாக உள்ள இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் தொழில் வாய்ப்புக்களை பெறுகின்றனர். Times New Roman அமைப்பானது கோழி வளர்ப்பாளர்களுடன் உற்பத்தி ஒப்பந்தங்களை செய்வதன் மூலமும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமைக் கோட்டினை விட்டு வெளியே வர உதவுகின்றது.

கோழி இறைச்சியை நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதன் மூலம் உடல் வளர்ச்சிக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான அளவு மாமிச புரதசத்தை பெற்றுக் கொடுக்க இத்துறைக்கு இயலுமாக உள்ளது. இலங்கையில் மலிவான விலையில் கிடைக்கக் கூடிய ஒரே ஒரு மாமிச உணவாக இது உள்ளது.

அண்மையில் கோழி இறைச்சியின் விலை சிறிய அளவில் அதிகரிக்கப்பட்டமை வரவேற்கப்பட்டதுடன் கோழி உற்பத்தியாளர்களுக்கு தேவையான சலுகைகள் மற்றும் உகந்த ஒழுங்கு முறைகள், மற்றும் நிதி காலநிலைகள் கோழி வளர்ப்பு துறை மென்மேலும் வளர்ச்சியடைய உதவும் என நம்பப்படுகின்றது.

தற்பொழுது வருடாந்த நபருக்கான சர்வதேச கோழி இறைச்சி நுகர்வு 17 கிலோகிராமாக உள்ளது. இது எமது தேசிய அளவின் இரண்டு மடங்காக இருப்பதனால், இலங்கையின் கோழி வளர்ப்பு துறை மேலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என இலங்கை கோழி வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X