2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொழும்பு மெசென்ஜர் வீதியில் களனி விசுர

Gavitha   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுவருடத்தின் முதலாவது 'களனி விசுர' பயிற்சிப்பட்டறைகள் கொழும்பிலிருந்து ஆரம்பமாகியிருந்தன. ஆமர் வீதி மற்றும் மெசென்ஜர் வீதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்கள், பிரைட்டன் ஹோட்டலில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு இலத்திரனியல் வயர்களை பதிதல் தொடர்பில் பின்பற்றப்படும் நவீன வழிமுறைகள் பற்றி அறிந்து கொண்டனர்.

களனி கேபிள்ஸ் பிஎல்சியின் விற்பனை பொறியியலாளர் சஞ்ஜீவ குணதிலகவினால், களனி விசுர பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 150க்கும் அதிகமான இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான இல்லங்கள் மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றுக்கான தரம் உத்தரவாதமளிக்கப்பட்ட வயர்களை தெரிவு செய்வது, தூரத்தை கவனத்தில் கொண்டு இல்லங்கள் மற்றும் கட்டடங்களில் ப்ளக் பொயின்ட்களையும் சுவிட்ச்களையும் பொருத்துதல், விளக்குகளின் எண்ணிக்கையை பொறுத்து வயர்களை தெரிவு செய்தல், முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பில் கவனம் செலுத்தல் மற்றும் வயர்களை பதிதல் பற்றிய விடயங்கள் பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றியவர்களுக்கு உணவு வேளைகள் மற்றும் பான வகைகள் போன்றன வழங்கப்பட்டிருந்ததுடன், பங்குபற்றுநர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கலுடன் நிறைவடைந்திருந்தன.

'களனி விசுர' திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு பங்குபற்றுநருக்கும் வீடுகள் அல்லது கட்டடங்களுக்கு அவசியமான வயர்களை பதிதல் தொடர்பிலான அறிவை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருந்ததுடன், இதன் மூலமாக போட்டிகரத்தன்மை வாய்ந்த சூழலில் பங்குபற்றிய இலத்திரனியலாளர்களுக்கு மின்கட்டமைப்புகளை பொருத்தும் ஆளுமை சேர்க்கப்படும்.

நாடு முழுவதையும் சேர்ந்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் முன்னணி பயிற்சிப்பட்டறையாக 'களனி விசுர' அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக மொத்தமாக 17,000 இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்கள் இதுவரை அனுகூலம் பெற்றுள்ளனர்.

களனி கேபிள்ஸ் பிஎல்சி கொழும்பு நகரங்களிலும் ஏனைய நகரங்களிலும் இந்த களனி விசுர பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுத்திருந்ததுடன், நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. குறிப்பாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகியன மாவட்டங்களிலும் இவை முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவானோர் 'களனி விசுர' திட்டத்தின் மூலம் பயன்பெற்றிருந்தனர். நிபுணத்துவ வாழ்க்கையில் பங்களிப்பு செலுத்துவதுடன், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களின் சமூக நிலைகளை மேம்படுத்தும் வகையிலும் 'களனி விசுர' சமூக பொறுப்புணர்வு செயற்திட்டம் அமைந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X