2025 ஜூலை 26, சனிக்கிழமை

கொழும்பில் Colombo City Centre

Gavitha   / 2017 பெப்ரவரி 28 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரத்தின் மத்தியில் நிர்மாணிக்கப்படும் Colombo City Centre திட்டம், கொழும்பு நகரின் அழகை மெருகூட்டும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அபான்ஸ் மற்றும் சில்வர் நீடில் ஹொஸ்பிடல்ஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டிணைந்து, Colombo City Centre நிர்மாணித்த வண்ணமுள்ளன.  

கொழும்பு-02 ஸ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில், 47 அடுக்குமாடிகளில் உருவாகிவரும் இந்த அதிசொகுசு வணிக வளாகத்தில், சில்வர் நீடில் நிறுவனத்துக்குச் சொந்தமான NEXT ொட்டல், சொகுசு குடியிருப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பன்முக உணவகங்களை உள்ளடக்கிய பரிபூரணத் திட்டமாக, இது உருவெடுத்து வருகிறது. இங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள், 973 முதல் 4,898 சதுர அடிகளில் 2, 3, 4, மற்றும் 5 படுக்கையறைகளைக் கொண்டது.  

Colombo City Centreஇல் உள்ள இல்லங்களில் வசிப்பவர்களுக்கு, பிரத்தியேகமான வாகனத் தரிப்பிட வசதிகளுடன், வணிக வளாகத்துக்குள் நுழைவதற்காக பிரத்தியேக லிஃப்ட் வசதிகள் உள்ளன. அதேபோல், 43ஆவது மாடியில், நவீன உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் தடாகம், Sauna, Barbecue Area சிறுவர் விளையாட்டுக்கூடம் மற்றும் Sky Lounge ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உடமைகளின் விலைகள் காரணமாக தற்காலத்தின் நீங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் எதிர்காலத்தில் மிகச்சிறந்ததொரு நன்மையை உங்களுக்குப் பெற்றுத்தரும். இங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் பிரத்தியேகமான உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X