2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கட்டட திட்ட விவரவியலாளர்களின் மாநாடு 2017க்கு JAT அனுசரணை

Editorial   / 2017 ஜூலை 12 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டட திட்ட விவரவியலாளர்களின் மாநாட்டின் (Building Specifiers’ Conference) 2ஆவது நிகழ்வுக்கு, JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம் பிரதான அனுசரணை வழங்கியது.

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் முன்னோடி நிகழ்வாக இடம்பெற்ற முதலாவது கட்டட திட்ட விவரவியலாளர்களின் மாநாடு நடைபெற்று முடிந்து ஐந்து மாதங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள், இந்த வெற்றிகரமான இரண்டாவது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்டட துறையுடன் தொடர்புபட்ட ஒவ்வொரு விடயத்திலும் பணியாற்றுகின்ற பெருமளவான நிறுவனப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவர்களுள் - கட்டடக் கலைஞர்கள், கட்டமைப்பாக்க பொறியியலாளர்கள், சிவில் பொறியியலாளர்கள், ஆலோசகர்கள், மாணவர்கள், ஒப்பந்தக்காரர்கள், அபிவிருத்தியாளர்கள், நிர்மாணிப்பாளர்கள், கணிய அளவையியலாளர்கள், செயற்றிட்ட முகாமையாளர்கள், அரச திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள், கட்டமைப்பாளர்கள் தொடக்கம் - பல்கலைக்கழக கல்வியலாளர்கள் வரை பல தரப்பினர் உள்ளடங்குவார்கள்.

“இவ்வாறான சிறந்த நிகழ்வு ஒன்றில், ஒரு அங்கமாக திகழ்வதையிட்டு JAT நிறுவனம் பெருமிதம் அடைகின்றது. கட்டட நிர்மாண துறையிலுள்ள முன்னோடி நிறுவனங்கள் தங்களது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்கான உறுதியான அடித்தளம் ஒன்றை இது உருவாக்கி இருக்கின்றது. கட்டிடம் தொடர்பான அதிகரித்த கவனக்குவிப்புக்கு ஓர் உறுதிமிக்க அடித்தளம் அவசியமாகின்றது. அது, உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் இத்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் நெறிமுறையான, புத்தாக்கமான முறைமைகள் மற்றும் நியமங்களை மிகக் கவனமான முறையில் கடைப்பிடிப்பதற்கு வசதியளிப்பதாக அமைய வேண்டும்.

அந்தவகையில், ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் மிக வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும் நாடுகளின் வரைபடத்தில் எமது நாட்டை மேற்படி தனிச்சிறப்புமிக்க மாநாடு மிகத் தெளிவாக முன்னிலையில் இடம்பிடிக்கச் செய்கின்றது” என்று, JAT ஹோல்டிங் (பிரைவேட்) லிமிட்டட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏலியன் குணவர்தன தெரிவித்தார்.

இந்த இரண்டாவது மாநாடு, அடிப்படையாக கட்டிட அபிவிருத்தி விடயத்தில் கூடிய கவனம் செலுத்தியது. அத்துடன், தொழில்சார் மற்றும் நிலைபேண்தகு முறைமைகளை மனதில் பதியவைப்பதற்கு முன்கூட்டியே தேவையான ஒரு விடயமாக காணப்படுகின்ற நிர்மாணம் என்ற விடயம் தொடர்பிலான புரிதலை மேம்படுத்திக் கொள்ள வழிவகுத்தது. அதேவேளை, வானுயர்ந்த கட்டடங்களின் வெற்றிகரமான அபிவிருத்திக்கு தலையாய அவசியமான விடயங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .