Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2021 மார்ச் 22 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையரின் பொதுசுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் 'ஹாபிக் மக்கள் ஆரோக்கிய திட்டம்', விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கேட்டுக்கொண்டதிற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவோரின் பொதுசுகாதார வசதிகளை வழங்கிட முன்வந்தது.
'விமான நிலையம் மீண்டும் வெளிநாட்டவர்களுக்காக திறந்த பின் பொதுசுகாதாரத்திற்காக பல்வேறு மாற்றங்களை மிக குறுகிய காலத்தினுள் மேற்கொள்ளவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. இச் செயற்திட்டத்தின் போது நாம் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் வருவோரின் பொதுசுகாதார தேவைகளை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கானதோர் திட்டத்தினை உருவாக்கிடலே. ஹர்பிக் இடம் கேட்டதிற்கமைய உடனடியாக செயற்பட்டு, நடமாடும் பொது சுகாதார கட்டமைப்புகளை விமான நிலையத்தினுள் ஸ்தாபித்தமைக்கமைய இச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இச்சந்தர்ப்பத்தின் போது ஹாபிக் பொது சுகாதார திட்டம் எமக்கு பங்களித்தமைக்கு நாம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்' என இது பற்றி கருத்து தெரிவித்த விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.ஏ. சந்ரசிரி தெரிவித்தார்.
'கொவிட் 19 பரவலினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகம்கொடுத்திட, குறித்த நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதையே கடந்த வருடம் முதலே ஹாபிக் பொதுசுகாதார செயற்திட்டம் பிரதான இலக்காக கொண்டது. அதற்கமைய நாடு முழுதும் பொதுமக்களுக்கான சுகாதார கட்டமைப்பின் மேம்படுத்திட ஒதுக்கப்பட்டிருந்த தொகை மற்றும் வளங்களை நாம் தற்காலிகமாக இச் செயற்திட்டத்திற்காக வழங்கிட தீர்மானித்தோம். அரசினால் மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்காக நடமாடும் பொது சுகாதார கட்டமைப்புகளை வழங்கியமை இந் நிகழ்ச்சித்திட்டத்தின் இன்னுமோர் தடமாகும். அத்தியாவசியமானதோர் நேரத்தில் விமான நிலையம் மற்றும் விமான நிலைய சேவைகள் உட்பட இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு எமது சேவைகளை வழங்கிட முடிந்தமை பெரிதோர் மகிழ்ச்சியாகும்' என இது பற்றி கருத்து தெரிவித்த ரெகிட் பென்கிசர் லங்கா நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் சதுரிகா பொன்சேகா அவர்கள் தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
42 minute ago
51 minute ago