2025 ஜூலை 26, சனிக்கிழமை

கண்டியில் எடிச லாட்டின் Data Wars

Gavitha   / 2017 மார்ச் 06 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

Virtual Reality என்பது உலகளாவிய ரீதியில் தொழில்நுட்ப மட்டத்தில் வளர்ந்து வரும் விடயமாக அமைந்துள்ளது. இந்த Virtual Reality இல் தனது வாடிக்கையாளர்களையும் ஈடுபடுத்தும் VR கேமிங்கை எடிசலாட் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. கண்டி சிட்டி சென்டரில் இந்த அதிகளவான கேமிங் ஆர்வலர்கள் மத்தியில், எடிசலாட் Data Wars எனும் தலைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

Virtual reality spaceship கேம் என்பது, விளையாட்டில் ஈடுபட்டோருக்கு, spaceship ஐ வழிநடத்திச் சென்று, பல பகல் வேளை டேடா பண்டல்களைச் சேகரிப்பது மற்றும் இரவு வேளை போனஸ் டேடா பண்டல்களைச் சேகரிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தது. அதிகளவு புள்ளிகளைப் பெற்றவருக்கு Samsung J7 அலைபேசி பரிசாக வழங்கப்பட்டிருந்தது. ஏனைய பங்குபற்றுநர்களுக்கு Wingles மற்றும் Dongles வழங்கப்பட்டிருந்தன.  

ஆர்வமுள்ளவர்களுக்கு எடிசலாட் எனிடைம் டேடா பக்கேஜ்களை விசேட விலையில் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எடிசலாட்டின் 3G வலையமைப்பில் பிந்திய மெருகேற்றத்துடன், டேடா பாவனையாளர்களுக்கு அதிவேக இணைய இணைப்பை இலங்கையின் 300க்கும் அதிகமான பகுதிகளில் அனுபவிக்க முடியும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X