2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கந்துரட்ட நிறுவனத்தின் மித்து பேபி தயாரிப்புக்கள்

Gavitha   / 2016 நவம்பர் 15 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

Godrej Sri Lanka நிறுவனம், தனது மித்து பேபி வர்த்தக நாமத்தை சேர்ந்தத் தயாரிப்புக்களை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் முகமாக கந்துரட்ட நிறுவனத்துடன் இணைந்துள்ளது. Godrej Consumer Products இன் பிரபல்யமான வர்த்தக நாமமான மித்து பேபியை உலகெங்கும் 30இற்கும் மேற்பட்ட நாடுகளில் பெற்றுக்கொள்ளலாம்.   

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த Godrej Sri Lanka இன் முகாமையாளர் அனுராக் ஜெயின், “எமது மித்து பேபி தயாரிப்புக்களின் விநியோகஸ்தர்களாக இலங்கையில் கந்துரட்ட நிறுவனத்தை நியமித்ததையிட்டு பெருமையடைகிறோம். கந்துரட்ட நிறுவனத்தின் பரந்த விநியோக வலையமைப்பு மற்றும் உள்ர் சந்தை தொடர்பான அவர்களின் ஆழ்ந்த அறிவு மித்து பேபி தயாரிப்புக்களின் சந்தைப்படுத்தலை வெற்றிகரமாக்கும் என நம்புகின்றோம்.

எமது சர்வதேச தரம் வாய்ந்த குழந்தைப் பராமரிப்புத் தயாரிப்புக்கள் விவேகமான தாய்மார்களின் முதற் தெரிவாக உலகெங்கும் விளங்குவதோடு இவ்விணைவு நாடெங்கிலுமுள்ள தாய்மார்களுக்கும் இவ்வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கின்றது. மித்து பேபி தயாரிப்புக்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பூரண பராமரிப்பை வழங்குகிறது. Godrej இன் 125 வருட வரலாறு வர்த்தக நாமத்தின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிக்கின்றது” என்றார்.   

மித்து பேபி இந்தோனேசியாவைச் சேர்ந்த மிதமான மற்றும் நம்பகமான குழந்தைப் பராமரிப்புத் தயாரிப்பு ஆகும். இது குழந்தையின் மென்மையான சருமத்தைப் பாதுகாக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட மிருதுவான சர்வதேச தரம் வாய்ந்த குழந்தைப் பராமரிப்பு தீர்வாகும்.

இலங்கையில் மித்து பேபியின் milk bath, தேன் மற்றும் பால் சேர்ந்த baby மற்றும் hair bath, இயற்கையான ஷம்பு, soap hair லோஷன், baby லோஷன், baby கிரீம்,baby oil மற்றும் baby கொலோன் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். தயாரிப்புக்கள் குளியல், குளியலுக்கு முன், பின் ஆகிய வரிசையைக் கொண்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .