2025 மே 21, புதன்கிழமை

கனவுகளை நனவாக்க இலங்கை வங்கியுடன் கைகோருங்கள்

Editorial   / 2018 மே 16 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களது நம்பிக்கைக்கு ஏற்ற சிறந்த சேவைகளையும் வசதிகளையும் வழங்கும் BOC வங்கி, உங்களது தனிப்பட்ட வங்கிக்கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான கனவையும் நனவாக்குகின்றது. அந்த வகையில், அரசாங்க மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் துறையில் பணியாற்றும் நிரந்த ஊழியர்கள், இலங்கை வங்கியில், தனிப்பட்ட கடனைப் பெற்றுக்கொள்ள விண்ணபிக்க முடியும். இதற்காக, வங்கி, சிறப்பான பிரிவொன்றை ஆரம்பித்துள்ளது.

வங்கிச்சந்தையில் வழங்கப்படும் தனிப்பட்ட கடன்களுக்கு வழங்கப்படும் வட்டிகளில், சிறந்த வட்டிவீதங்களை உள்ளடக்கி, 10 வருட காலப்பகுதிக்குள், வாடிக்கையாளரின் மீள் செலுத்தும் திறன் அடிப்படையில், கடனைச் செலுத்தி முடிப்பதற்கான தவணைக் கட்டணம் அறவிடப்படும். இந்தச் சலுகை, நாடளாவிய ரீதியிலுள்ள 627 வங்கிக்கிளைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.   

உங்களது கனவு, எவ்வளவு பெரியதாக இருப்பினும் சரி, இலங்கை வங்கியின் இந்தத் தனிப்பட்ட கடனின் மூலம், அதை நனவாக்கிக்கொள்ள முடியும். இதன்மூலம், வாடிக்கையாளர்களின் கனவுகளான, வாகனமொன்றைக் கொள்வனவு செய்தல், திருமண நிகழ்வொன்றை நிகழ்த்துதல், வீட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்தல், பிள்ளைகளின் உயர்கல்விச் செலவுகளைக் கவனித்துக்கொள்ளல், தலயாத்திரை உள்ளிட்ட சுற்றுலாக்களுக்குச் செல்லுதல் என்று, அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளக்கூடியதாக உள்ளது. வாடிக்கையாளர்களின் கனவுகளை நனவாக்கும் நடவடிக்கைகளை, இலங்கை வங்கி, தொடர்ந்து செய்து வருகின்றது. இதில், இணையத்தள சேவைகள், ATM/CDM ஆகியன முக்கிய பங்காற்றி வருகின்றன.   

79 வருட வங்கி அனுபவத்தைக் கொண்ட இலங்கை வங்கி, நாட்டிலேயே, நம்பகரமான முன்னோடி வங்கியாகக் காணப்படுகின்றது. இலங்கைப் பிரஜைகள், பணரீதியாக முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு, முடிந்தவரையான தீர்வுகளை வழங்கி, அவர்களது வாழ்க்கை நிலையை உறுதிப்படுத்தி வருகின்றது. இதன்மூலம், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .