Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 மே 20 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறைந்த வருமானம் கொண்ட வைப்புத் தொகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்கான திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையில், திங்கட்கிழமை (19) கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025.04.01 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வரி வீதம் 5 சதவீதம் தொடக்கம் 10 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் 2025 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வரி அறவிடப்படுகின்ற வருடாந்த வருமான எல்லையான 1.8 மில்லியன் ரூபாய்களை விஞ்சாத வருமானத்தைக் கொண்ட நபர்களின் தக்கவைக்கப்பட்ட வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான வைப்பாளர்கள் மற்றும் குறைந்த வருமானங் கொண்டவர்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைக்கான தீர்வாக வரி விடுப்புக்குக் குறைவான வருமானத்தைக் கொண்டுள்ள நபர்களுக்கு சுய பிரகடனத்தைச் சமர்ப்பிக்கின்ற முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, வட்டி மீதான தக்கவைக்கப்பட்ட வரியை அறவிடுவதிலிருந்து விடுவிப்பதற்கு 1.8 மில்லியன் ரூபாய்களை விஞ்சாத மதிப்பீட்டு வருமானத்துடன் கூடிய அனைத்து நிலையான வைப்பாளர்களுக்கு சுய பிரகடனத்தை அறிமுகப்படுத்துவதற்கும் மற்றும் அனைத்து வகையான வங்கிக் கணக்குகளையும் திறப்பதற்காக வரி அறிமுக இலக்கத்தை (TIN )சமர்ப்பிப்பதற்குக் கட்டாயமாக்கும் தகுந்த திருத்தத்தை உள்வாங்கி 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்கான திருத்தம் செய்வதற்காக அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago