2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கலா பொல 2016: 13 மில்லியன் ரூபாய் வருமானம்

Gavitha   / 2016 மார்ச் 14 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

'முன்னொருபோதும் இல்லாதளவுக்கு பார்வையாளர் வருகையும் ரூபாய் 13 மில்லியன் விற்பனையும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு நாம் மெய்சிலிர்த்துப் போயுள்ளோம்.' என்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) பிரிவு தலைமை அதிகாரியான செல்வி. நதீஜா தம்பையா கூறினார்.

ஜோர்ஜ் கீற் மன்றம் மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட 'காலபொல 2016' கண்காட்சியானது, பதிவு செய்யப்பட்ட 308 கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் - இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஜேர்மன் தூதுவர் மேன்மைதங்கிய டாக்டர். யேர்கன் மோர்ஹார்ட், ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைவர் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் சுசந்த ரட்னாயக்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கலாநிதி. யேர்கன் மோர்ஹார்ட் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், 'இலங்கையானது இயற்கை மற்றும் அதன் அற்புதமான மக்கள் போன்றவற்றில் மாத்திரம் செழிப்புமிக்க நாடாக திகழவில்லை. மாறாக, படைப்பாற்றல் விடயத்திலும் இலங்கை வளம் பொருந்தியதாக காணப்படுகின்றது என்பதை காண்பதும் அதற்கு சாட்சியாக இருப்பதும் எப்போதும் எமக்கு மனங்கவர்வதாக உள்ளது' என்றார்.

கலாபொல 2016 கண்காட்சியில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பி.எல்.சி. இனால் 'சிறுவர்களின் ஓவிய பிரிவு' ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இது 184 சிறுவர் கலைஞர்களை தம்பக்கம் கவர்ந்திழுத்திருந்ததுடன், இவர்களுக்கு சான்றிதழ்களும் எலிபண்ட் ஹவுஸ் நிறுவனத்தின் சிற்றூண்டி உபசாரம் மற்றும் சகுரா முகவர் நிறுவனத்தால் அனுசரணை அளிக்கப்பட்ட ஓவிய உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X