2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கல்வி அமைச்சுடன் Microsoft இணைவு

Freelancer   / 2024 மார்ச் 25 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கல்வி அமைச்சு (MOE) மற்றும் Microsoft ஆகியன, இலங்கையின் தேசிய பாடசாலை கல்வித் திட்டத்தில் Artificial Intelligence (AI) மற்றும் Machine Learning (ML) ஆகியவற்றை ஒன்றிணைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த கைகோர்ப்பு, நாட்டில் கல்வியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தரம் எட்டு மற்றும் அதிலிருந்து உயர்ந்த வகுப்புகளுக்காக ஆரம்ப கட்ட பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த புரித்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்தான அறிமுகத்தில் Microsoft 365 கட்டமைப்பு ஒதுக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பான தொடர்பாடல் மற்றும் கைகோர்ப்பு மையமாக அமைந்திருக்கும்.

அனைவருக்கும் AI அணுகலை ஏற்படுத்திக் கொடுக்கும் இலக்குடன், சர்வதேச Microsoft கல்விச் செயலணிகள் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரி (NIE) ஆகியன இணைந்து, கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட இருபது பாடசாலைகளில் ஆரம்பகட்டமாக இந்தப் பாடவிதானம் அறிமுகம் செய்யப்படும். ஒன்பது மாகாணங்களிலிருந்தும் ஆகக்குறைந்தது ஒரு பாடசாலையேனும் இந்தத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்னோடி அளவீட்டுத் திட்டமாக இந்த பாடசாலைகள் அமைந்திருக்கும். இந்த ஆரம்ப கட்டத்திட்டத்தினூடாக, பயிற்றுவிப்பாளரை பயிற்றுவிப்பது மாதிரியினூடாக, பயிலுநர்களுக்கும் கல்வி கற்பிப்போருக்கும் வலுவூட்டப்படுவதுடன், AI யுகத்தில் அவர்கள் இயங்குவதற்கு அவர்களை நன்கு தயார்ப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

MOU புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் 2024 மார்ச் 19ஆம் திகதி நடைபெற்றது. இதில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம், கல்வி அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு மற்றும் Microsoft ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மற்றும் Microsoft இந்தியா மற்றும் தெற்காசியா தலைவர் புனீத் சந்தோக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த கருத்துத் தெரிவிக்கையில், “கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும், மாற்றமடைந்து வரும் உலகில் அவசியமான திறன்களை பெற்றுக் கொடுத்து எமது எதிர்கால தலைவர்களுக்கு வலுவூட்டுவதிலும் AI ஒன்றிணைப்பு என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். Microsoft உடன் நாம் கைகோர்த்துள்ளதனூடாக, இந்த மைல்கல் செயற்பாட்டில் முக்கிய பங்காற்றப்படுவதுடன், நாம் இணைந்து, எதிர்காலத்துக்கு அவசியமான திறன்களை வழங்கும் AIஐக் கொண்ட டிஜிட்டலுக்கு முக்கியத்துவமளிக்கும் பாடவிதானத்தை அறிமுகம் செய்யவுள்ளோம்.” என்றார்.

இந்தக் கைகோர்ப்பு மாணவர்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்காமல், கல்வி கற்பிப்போர், கல்விச் சேவைகளை வழங்கும் நிலையங்கள் மற்றும் இலங்கையின் தேசிய கல்விக் கட்டமைப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Microsoft இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் ஹர்ஷ ரந்தெனி குறிப்பிடுகையில், “எதிர்கால மாற்றங்களை ஏற்படுத்துவோராக மாணவர்கள் இயங்குகின்றனர். எமது சமூகத்தின் இளம் நபர்களாக அவர்களின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.” என்றார்.

“இலங்கை அதன் AI பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில், தேசத்தின் முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்கவும், எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கு Microsoft தன்னை அர்ப்பணித்துள்ளது. கல்விக் கட்டமைப்பில் AI ஐ ஒன்றிணைக்கும் செயன்முறை, எதிர்காலத் தலைமுறையினருக்கு தேசத்தின் AI புரட்சிக்கு பங்களிப்பு வழங்க வலுவூட்டுவதாக அமைந்திருக்கும் என்பதுடன், மாற்றமடைந்து வரும் உலகிற்கு நிகராக திகழச் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .