2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

களனி கேபில்ஸ் பிஎல்சிக்கு மூன்று விருதுகள்

Gavitha   / 2016 நவம்பர் 28 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கேபில்ஸ் பிஎல்சி, SLIM-NASCO 2015 விருதுகள் வழங்கும் நிகழ்வில் மூன்று வெள்ளி விருதுகளை தனதாக்கியிருந்தது. இந்நிகழ்வு அத்திடிய, ரீகல்-லேக்சைட்டில் நடைபெற்றது.  

தொழிற்றுறை மற்றும் விவசாய பொருட்கள் மற்றும் சேவைகள் பிரிவின் விற்பனை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பிரிவில், வெள்ளி விருதை ரொஷான் பாலசூரிய தனதாக்கியிருந்தார்.  

ஆண்டின் முன்னிலையாளருக்கான விருதை, கசுன் ருவன் குமார (விற்பனை பிரதிநிதி-மாத்தறை) பெற்றுக்கொண்டதுடன், வெண்கல விருதை மலிந்த கருணாநாயக்க (விற்பனை பிரதிநிதி-நீர்கொழும்பு) பெற்றுக்கொண்டார்.ஆண்டின் சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளருக்கான வெள்ளி விருதை சஞ்ஜீவ குணதிலக தனதாக்கியிருந்தார்.

SLIM-NASCO 2015 விருதுகள் மூலமாக இலங்கையின் சந்தைப்படுத்தல் நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.  

களனி கேபில்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் நடைபெறும் வெவ்வேறு விருது வழங்கும் நிகழ்வுகளில் களனி கேபில்ஸ் பிஎல்சி விருதுகளை வெல்கின்றமை குறிப்பிடத்தக்கது. நுகர்வோர்களாலும் நிபுணர்களாலும் எமது நிறுவனத்துக்கு வழங்கப்படும் உண்மையான கௌரவிப்பாக இது அமைந்துள்ளது. வியாபார துறையில் நிறுவனம் முன்னிலையில் உள்ளதுடன், எமது தயாரிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பான ஊழியர்கள் குழாம் ஆகியோர் எமது வாடிக்கையாளர்களின் உண்மையான தேவைகளை உணர்ந்து செயலாற்றிய வண்ணமுள்ளனர். நிறுவனத்தின் சார்பாக வெற்றியீட்டிய நான்கு ஊழியர்களுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்றார்.  

களனி கேபிள்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர், அனில் முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் உற்பத்தியில் களனி கேபிள்ஸ் முன்னணியில் திகழும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்க எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளது. எமது விற்பனை செயலணியினரின் மூலமாக, இந்த SLIM-NASCO 2015 விருதுகள் வழங்கலில் விருதுகளை வெல்வதற்கு, சிறந்த அர்ப்பணிப்பான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. எமது வாடிக்கையாளர்களின் அடிப்படையில், களனி கேபிள்ஸ் பிஎல்சி தயாரிப்புகளைக் கொள்வனவு செய்வதன் மூலமாக சிறந்த பெறுமதி கிடைக்கின்றமை உறுதி செய்யப்படுகிறது” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .