Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 11 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி கேபல்ஸ் பிஎல்சி, தனது சிறப்பான விற்பனை பிரதிநிதிகளை கௌரவிக்கும் வகையில் பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கும் நிகழ்வை தொடர்ச்சியான ஆறாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், களனி கேபிள்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபாலவின் பங்குபற்றலுடன் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, ஆண்டின் சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளருக்கான (செயற்றிட்டங்கள்) விருதை ஸ்ரீபதி சமந்த வென்றிருந்தார்.
ஆண்டின் சிறந்த சிறந்த விற்பனைப் பிரதிநிதிக்கான விருதை நலின் சமன்திலக தனதாக்கியிருந்ததுடன், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை ரொஷான் பாலசூரிய மற்றும் சிந்தக ராஜபக்ஷ ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கலின் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீபதி சமந்த மற்றும் நலின் சமன்திலக ஆகியோருக்கு பணப்பரிசுகள் வழங்கப்பட்டதுடன், வெளிநாட்டு சுற்றுப்பயண வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இவர்கள் 2016/2017 பருவ காலத்துக்கான விற்பனை இலக்குகளை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
களனி கேபல்ஸ் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால, குறிப்பிடுகையில், களனி கேபல்ஸ் வியாபார செயற்பாடுகளை ‘484 இதயங்கள், ஒரு துடிப்பு’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கிறது, கம்பனியின் முதுகெலும்பாக விற்பனை செயலணி அமைந்துள்ளது என்றார்.
“எமது நிறுவனத்தின் முதுகெலும்பாக ஊழியர்கள் காணப்படுகின்றனர். எனவே நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பங்களிப்பு வழங்கும் இந்த ஊழியர்களின் பங்களிப்பை வருடாந்தம் கௌரவிக்க வேண்டிய எமது முக்கிய பொறுப்பாக அமைந்துள்ளது. வெற்றிகரமாக இயங்கும் நிறுவனத்தின் பொறுப்பு என்பது, நிறுவனத்தின் நிலைபேறான செயற்பாடுகளுக்காக பங்களிப்பு வழங்கும் அதன் ஊழியர்களை கௌரவிப்பதாகும். பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருது என்பது விற்பனைப் பிரிவில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தும் இரு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் வெற்றியாளர்களான நலின் சமன்திலக மற்றும் ஸ்ரீபதி சமந்த ஆகியோர் தமது இலக்குகளை கடந்திருந்ததுடன், மாபெரும் விற்பனை தொகைகளை எய்தியிருந்தனர். நிறுவனத்தின் சார்பாக அவர்களுக்கு நான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago