2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

குருதி அழுத்த கண்காணிப்பு கருவிகள் அன்பளிப்பு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

Terumo Corporation அதன் விநியோக பங்காளரான ஹேமாஸ் சேர்ஜிகல் அன்ட் டயக்னொஸ்டிக்ஸ் (பிரைவட்) லிமிடெட் உடன் இணைந்து, Nissei DS-11 குருதி அழுத்த கண்காணிப்பு கருவிகளை இலங்கை இதய நோயியல் வைத்தியர் நிறுவகத்துக்கு அன்பளிப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. புத்தாக்கமான மருத்துவ தீர்வுகளினூடாக, சமூகங்களுக்கு வலுவூட்டல் மற்றும் இருதய சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு போன்றவற்றை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

புகழ்பெற்ற இருதய சிகிச்சை நிபுணரான வைத்தியர். டானியா பெரேராவினால் இந்தத் திட்டம் வழிநடத்தப்பட்டதுடன், இலங்கையில் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவற்றுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய மைல்கல்லாகவும் அமைந்துள்ளது. Nissei DS-11 குருதி அழுத்த கண்காணிப்பு இயந்திரம், குருதி அழுத்த கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்வதுடன், பயன்படுத்த இலகுவானதாகவும், துல்லியமான பெறுபேறுகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. இந்த நவீன சாதனம் ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இரத்தஅழுத்தத்துக்கான ஐரோப்பிய சங்கத்தின் சான்றிதழையும் பெற்றுள்ளது. உயர் சிகிச்சை துல்லியத்தன்மை மற்றும் தங்கியிருக்கும் திறனை வழங்குகின்றது. உயர் தரம் வாய்ந்த அளவீட்டு சாதனங்களை தயாரிப்பதில் 60 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள Nissei, சுகாதார பராமரிப்பு இனங்காணல்களில் துல்லியத்தன்மை மற்றும் நுணுக்கத்தன்மைக்கான தனது ஒப்பற்ற அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது.

ஹேமாஸ் சேர்ஜிகல் அன்ட் டயக்னொஸ்டிக்ஸ் (பிரைவட்) லிமிடெட்டின் பிரதிநிதிகளான சிரேஷ்ட வியாபார முகாமையாளர் டிலன் சில்வா, தயாரிப்பு முகாமையாளர் (இடையீட்டு தயாரிப்புகள்) சுரெய்ன் அல்கம, உதவி தயாரிப்பு முகாமையாளர் (மருத்துவ பராமரிப்பு தீர்வுகள்) உதார லியனகே மற்றும் சிரேஷ்ட தொழில்நுட்பவியலாளர் லஹிரு பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

இதய நோயியல் வைத்தியர் நிறுவகத்தின் தலைவரான இருதய சிகிச்சை நிபுணரான வைத்தியர். டானியா பெரேரா குறிப்பிடுகையில், இந்த குருதி அழுத்த கண்காணிப்பு இயந்திரங்களை அன்பளிப்பு செய்திருந்தமைக்கு நன்றி தெரிவித்தார். தமது சிகிச்சைசார் பயிற்சிப் பட்டறைகளின் போது வெளிப்பிராந்திய வைத்தியசாலைகளில் இந்த சாதனங்களுக்கு காணப்படும் கேள்வியின் பிரகாரம் அவற்றை இதய நோயியல் வைத்தியர் நிறுவகம் பகிர்ந்தளிக்கவுள்ளது.

உலகளாவிய ரீதியில் இதய நோய்கள் தொடர்ந்தும் பெருமளவு சுகாதார சவால்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுபோன்ற குருதி அழுத்த கண்காணிப்பு இயந்திரத்தின் தேவை மிகவும் இன்றியமையாதது. குருதி அழுத்தம் இனங்காணப்பட்ட நோயாளர்கள் முதல், கர்ப்ப கால குருதி அழுத்தத்துக்கு முகங்கொடுக்கக்கூடிய இடரை எதிர்நோக்கியிருக்கும் கர்ப்பிணி தாய்மாருக்கும் இந்த கண்காணிப்பு இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

Terumo Corporation மற்றும் ஹேமாஸ் சேர்ஜிகல் அன்ட் டயக்னொஸ்டிக்ஸ் (பிரைவட்) லிமிடெட் ஆகியன இலங்கையில் இருதய சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு தம்மை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளன. Nissei DS-11 குருதி அழுத்த கண்காணிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு போன்ற செயற்பாடுகளினூடாக, இருதய நோய்கள் மற்றும் பக்கவாதங்கள் போன்ற நிலைகளுக்கு எதிரான சுகாதார பராமரிப்பு நிபுணர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க எதிர்பார்க்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X