Freelancer / 2023 மே 07 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

டெட்டோல், உலகளாவிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு நாமமாகும். இது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகின்றது. மே 5 ஆம் திகதி உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல புதிய திட்டங்களின் மூலம் நல்ல பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன இருப்பதாக அறிவித்துள்ளது.
ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கான Dettol இன் அர்ப்பணிப்பின் அடிப்படையில், இந்தப் புதிய வேலைத் திட்டமானது இலங்கை சமூகத்தினரிடையே முறையான தனிப்பட்ட மற்றும் வீட்டு சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதையும் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை மக்களிடையே சிறந்த சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக டெட்டோல் இவ் ஆண்டு தொடர்ச்சியான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில், மகப்பேறு கிளினிக்குகள், பாடசாலை செயற்பாடுகள் மற்றும் பேரிடர் நிர்வகிப்பு நடவடிக்கைகள் போன்ற நிகழ்வுகளில் கவனம் செலுத்தப்படுவதுடன், இச் செயற்பாட்டில் தொலைக்காட்சி உரையாடல்களின் மூலம் பொது மக்களுக்கான அறிவித்தல்களும் வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் முறையான கை கழுவும் பழக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் Dettol மற்றுமொரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இலங்கையில் கைகளில் விஷக் கிருமிகளை நீக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்நாட்டின் கலாசார கட்டமைப்பில் நடைமுறையிலுள்ள சிந்தனைகளின் ஊடாக கைகழுவும் நல்ல பழக்கங்களை மக்களின் வாழ்வில் மீள அறிமுகப்படுத்துவதே இச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.
5 minute ago
21 minute ago
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
47 minute ago
51 minute ago