2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொக்கா-கோலாவின் PET போத்தல்கள் மீள்சுழற்சி செயற்றிட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிளாஸ்டிக் போத்தல்களுக்கு ‘வாழ்வை மீள அளித்தல்’ என்ற தமது உறுதிமொழியை வெளிப்படுத்தும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபை, Eco-Spindles (Pvt) Ltd என்பவற்றுடன் இணைந்து Coca-Cola Beverages (Sri Lanka) Ltd, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களின் சௌகரியத்துக்கு ஏற்ற வகையில், பொது இடங்களில் போத்தல்களை வீசுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் முக்கியமான இடங்களில் போத்தல் சேகரிப்பு கொள்கலன்களையும் அறிவுறுத்தல் பலகைகளையும் நிறுவியுள்ளது.   

கொக்கா- கோலாவால் PET பிளாஸ்டிக் தயாரிப்புகளைச் சேகரிப்பதற்காக  ‘வாழ்வை மீள அளித்தல்’ தொட்டிகள் 22 வரையில் வைக்கப்பட்டுள்ளன. அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்காக ‘வாழ்வை மீள அளித்தல்’ PET பிளாஸ்டிக் மீள்சுழற்சி தொட்டிகளை கொக்கா-கோலா விசேடமாக தயாரித்துள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பங்காளித்துவத்துடன் இதைத் தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ளது.

அசோக விக்கிரமசிங்ஹ-தலைவர் கொகாகோலா பேவரேஜ் இலங்கை விமிடெட் (CCBSL), சமன் ஓபனநாயக்க - எக்ஸ்பிரஸ்வே ஒபரேஷன், பராமரிப்புப் பிரிவு இயக்குநர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை கலாநிதி அனுஷ அமரசிங்ஹ, முகாமைத்துவப் பணிப்பாளர் BPPL ஹோல்டிங்ஸ் பி. எல். சி ஆகியோர் உத்தியோகப்பூர்வ அறிமுக விழாவில் கலந்து கொண்டனர்.  

சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமூக நலன் சார்ந்த தமது அர்ப்பணிப்பின் அங்கமாக PET மீட்சி மற்றும் மீள்சுழற்சிக்கான இலக்கு வைத்தல் மூலம் இலங்கையில் PET மீள்சுழற்சி அளவை அதிகரிப்பதற்கு கொக்கா-கோலா அர்ப்பணிப்புடன் உள்ளது.

வினைத்திறன் மிக்க, நிரந்தர தீர்வாக ‘வாழ்வை மீள அளித்தல்’ தொட்டிகளை எளிதில் அணுகும் பழக்கத்தை பொது மக்களுக்கு வழங்குவதற்கு மீள்சுழற்சிப் பழக்கத்தைக் குளிர்பான நிறுவனம் முன்னிறுத்துகின்றது. கொக்கோ- கோலா நிறுவனத்தின் ‘கழிவற்ற உலகை உருவாக்குதல்’ என்ற நோக்கின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு உள்ளது.   

2030ஆம் ஆண்டளவில் தமது பொதியிடலின் 100 சதவீதத்தைச் சேமித்தல் மற்றும் மீள்சுழற்சி செய்தல் என்ற கொக்கா-கோலா நிறுவனத்தின் உலகளாவிய இலக்காக கழிவுகளற்ற உலகம் என்பது உள்ளது.

இலங்கையிலும் நிறுவனத்தின் புதிய பொதியிடல் தொலைநோக்கின் பிரதான இலக்காக இது இருக்கின்றது. இதன் ஊடாக, பொதியிடலை 100 சதவீதம் மீள்சுழற்சிக்கானதாக மாற்றுவதுடன், நாட்டில் தமது பொதியிடலுக்கு இணையான அளவைச் சேமித்தல் மற்றும் மீள்சுழற்சி செய்தலையும் இலங்கையில் உள்ள கொக்கா-கோலா கட்டமைப்பு உத்தேசித்துள்ளது. அத்துடன், சுத்தமானதும் சிறந்த சூழலை நோக்கியும் பணியாற்றுகின்றது. நூல், தூரிகைகள் செய்வதற்கு அனைத்து PET போத்தல்களும் Eco-Spindles (Pvt) Ltd இனால் சேகரிக்கப்பட்டு, மீள்சுழற்சி செய்யப்படும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .