Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மார்ச் 08 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி 2023ம் ஆண்டில் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்துடன் (IFC) இணைந்து நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு (MSMEs) 27 ஆற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தியுள்ளது. MSME வர்த்தகங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தரமான வடிவமைப்பைப் பயன்படுத்தி இச்செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நீர்கொழும்பு, இரத்தினபுரி, வவுனியா, கண்டி, கடவத்தை, அக்கரைபற்று, யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை மற்றும் மினுவங்கொடை ஆகிய இடங்களில் இவை நடத்தப்பட்டன. 'வர்த்தக மூலோபாயங்களை புதுப்பித்தல்' 'இலாபத்தன்மை மற்றும் உற்பத்தித் திறன்' 'டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் சந்தை இடம்' 'டிஜிட்டல் வர்த்தக முத்திரை முகாமைத்துவம்' மற்றும் 'மகளிர் வலுவூட்டல் மற்றும் தொழில்முயற்சி;' ஆகிய தலைப்புக்களில் இந்த செயலமர்வுகள் இடம்பெற்றன.
IFC இன் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. IFC ஆல் நடத்தப்பட்ட பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்ற கொமர்ஷல் வங்கியின் அதிகாரிகளால் இந்தத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.
MSMEs க்களுக்கான ஆற்றலையும் அறிவையும் மேம்படுத்தும் வகையில், இந்த விஷேட தொடரை ஆரம்பிக்க முன்னர் கொமர்ஷல் வங்கி சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்துடன் (IFC) இணைந்து பயிற்சித் தேவைகளை மதிப்பீடு செய்யும் வகையில் பாட வடிவங்களையும், முன் கூட்டிய கேள்விக் கொத்து படிவங்களையும் தயாரித்தது, முன்னோடி நிகழ்ச்சித் திட்டங்களையும் நடத்தியது. எதிர்காலத்தில் SME க்களுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வங்கி அதிகாரிகளை வளவாளர்களாகப் பயிற்றுவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
“SME க்கள் விடயத்தில் கொமர்ஷல் வங்கி எப்போதுமே விஷேட கவனம் செலுத்தி வந்துள்ளது. இலங்கையில் இந்தப் பிரிவினருக்கு ஆகக் கூடுதலான கடன்களை வழங்கும் நிறுவனமாகவும் கொமர்ஷல் வங்கியே உள்ளது' என்று கூறினார் வங்கியின் தனிநபர் வங்கி மற்றும் SME பிரிவின் உதவி பொது முகாமையாளர் எஸ் கணேஷன் “SME ஆற்றல் திட்டத்தின் குறிக்கோள் எம்முடன் ஏற்கனவே இருக்கின்ற மற்றும் ஏனைய சாத்தியமுள்ள MSME வாடிக்கையாளர்களின் வர்த்தக முகாமைத்துவ ஆற்றலை மேம்படுத்துவதும், கொவிட்-19 நோய் பரவலின் நீண்டகால எதிர்மறை தாக்கங்களை தணிப்பதும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதும் ஆகும். எமது இறுதி இலக்கு MSME க்களின் வர்த்தக செயற்பாடுகளில் நிலைத்தன்மையை ஸ்தாபிப்தாகும்.' என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டில் தொழில்முயற்சிப் பிரிவின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதி ரீதியான விழிப்புணர்வு மற்றும் நிதி கற்கை திட்டங்களை மேற்கொள்வதில் முன்னோடி நிறுவனமாக கொமர்ஷல் வங்கி காணப்படுகின்றது. அரச மற்றும் தனியார் பிரிவினரின் ஒத்துழைப்போடு இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த சுமார் ஒரு தசாப்த காலத்தில் கொமர்ஷல் வங்கி இவ்வாறான 170க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இவற்றால் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 15000 தொழில் முயற்சியாளர்கள் பயன் அடைந்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago