2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கொமர்ஷல் வங்கி அதிகம் கடன் வழங்கிய வங்கி

Freelancer   / 2024 ஜூலை 01 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கடன் வழங்குனராக கொமர்ஷல் வங்கி திகழ்ந்தது. இதற்கிணங்க மொத்தம் 17 அரச மற்றும் தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன் பெறுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை வங்கி கொண்டிருந்ததாக நிதி அமைச்சு உறுதி செய்துள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கைக்கிணங்க, வழங்கியுள்ள ரூ. 704.142 பில்லியன் மொத்தக் கடனில் ரூ. 231.655 பில்லியனை கொமர்ஷல் வங்கியானது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) கடனாக வழங்கியுள்ளது. இது வங்கி வழங்கியுள்ள மொத்தக்கடனில் 33% ஆகும்.

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கொமர்ஷல் வங்கியானது தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக மிகப்பெரிய கடன் வழங்குனராக திகழும் நிலையில். நிதியமைச்சின் கூற்றுக்கிணங்க நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 52%, வேலைவாய்ப்பில் 45% மற்றும் ஏற்றுமதியில் 20% என்ற ரீதியில் பங்களிப்பினை வழங்கி வருகிறது.

SME துறைக்கான வங்கியின் அர்ப்பணிப்பு குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி திரு சனத் மனதுங்க, 'சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் நிலையில் தற்போதைய நிலையற்ற பொருளாதார நிலைமையில் இத்துறைக்கு கணிசமான ஆதரவு தேவைப்படுகிறது. 1970களின் முற்பகுதியில் இருந்து, கொமர்ஷல் வங்கி இந்தத் துறையின் முழுமையான வளர்ச்சியில் மூலோபாய ரீதியாக கவனம் செலுத்தி வருகிறது. எங்களது முயற்சிகள் தொடர்ந்து நான்காவது ஆண்டாக SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குபவராக எங்களை நிலைநிறுத்தியுள்ளது. SME பிரிவுக்கான எங்கள் கடன் 2020 இல் ரூ 163.9 பில்லியனில் இருந்து 2023 இல் ரூ 231.6 பில்லியனாக வளர்ச்சியடைந்துள்ளது. இது இந்தத் துறையில் வங்கியின் உறுதியான உறுதிப்பாட்டை விளக்குவதாக உள்ளது.

கொமர்ஷல் வங்கியானது SME துறையின் நிதித் தேவைகளை மதிப்பிட்டு வருவதுடன் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, பெண்கள் தலைமையிலான வர்த்தகங்கள் மற்றும் இறக்குமதி மாற்றுத் தொழில்கள் போன்ற இலக்குப் பிரிவுகளில் வங்கியால் பாதுகாக்கப்பட்ட சலுகைக் கடன் வரிகள் மூலம் நிதி உதவியானது நீடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் குறைவான செயல்திறன் கொண்ட வர்த்தக செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக, முன்கூட்டியே எச்சரிக்கை சமிக்ஞைகளை வெளிப்படுத்தும் வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே ஆதரவளிக்க, 2020 ஆம் ஆண்டில் வர்த்தக மறுமலர்ச்சி மற்றும் மறுவாழ்வு பிரிவை வங்கி அமைத்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X