2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கொமர்ஷல் வங்கி கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு வசதி

S.Sekar   / 2024 பெப்ரவரி 09 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியினால் வழங்கப்பட்ட பிரீமியம் பிரிவு கிரெடிட் கார்ட்களை வைத்திருப்பவர்களுக்கு விமான நிலைய ஓய்வறை அணுகலை மேம்படுத்துவதாக வங்கி அறிவித்துள்ளது.

வங்கியால் செயற்படுத்தப்படும் இந்த முயற்சியானது, கொமர்ஷல் வங்கி வீசா Infinite கிரெடிட் கார்ட்களை வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள விமான நிலைய ஓய்வறைகளில் வருடத்திற்கு நான்கு விசேட சலுகையினை அனுபவிக்கலாம். அத்தோடு Visa Signature மற்றும் World Mastercard கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இரண்டு விசேட ஓய்வறை சலுகையினை பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள் எனவும் வங்கி அறிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் சில்லறை வங்கி மற்றும் சந்தைப்படுத்தல் பிரதிப் பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க, 'பிரீமியம் கிரெடிட் கார்ட்களை வைத்திருப்பவர்களுக்கு விமான நிலைய ஓய்வறை அணுகல் வழங்கப்படுவது வழக்கம். 'கொமர்ஷல் வங்கியால் வழங்கப்பட்ட மூன்று வகை பிரீமியம் கார்ட்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் இந்த அணுகல் அதிகரிப்புடன், எங்களது கார்ட்களை வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் மதிப்பை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.' என்றார்.

விரிவாக்கப்பட்ட ஓய்வறை நன்மைகள் வாடிக்கையாளர் அனுபவத்தை அதிகரித்துள்ளதுடன், விசா மற்றும் மாஸ்டர் கார்ட் பிரீமியம் கார்ட்டுகளின் எல்லை தாண்டிய பயன்பாட்டை அதிகரிக்க, வங்கியின் பிரீமியம் அட்டைதாரர் பிரிவில் ஒட்டுமொத்த கிரெடிட் கார்ட் செலவினங்களை அதிகரிக்கவும், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் தக்கவைப்பை மேம்படுத்துதல் மற்றும் ComBank பிரீமியம் கார்டை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், போட்டித்தன்மையுடையதாகவும் மாற்றவும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொமர்ஷல் வங்கியால் வழங்கப்பட்ட UnionPay AP (Asia Prestige) டயமண்ட் கார்ட்களை வைத்திருப்பவர்கள் விமான நிலைய ஓய்வறையை அனுபவிக்கின்றனர். DragonPass இலிருந்து கூடுதல் ஓய்வறை அணுகலுடன் கார்ட் உரிமையாளர்களுக்கு எல்லையற்ற VIP விமான நிலைய ஓய்வறை அணுகல் மற்றும் அவர்களது துணைக்கு வருடத்திற்கு ஆறு இலவச வருகைகளும் யூனியன்பே ஏபி பிளாட்டினம் கார்ட் வைத்திருக்கும் கார்ட்தாரர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் என இருதரப்புக்கும் வருடத்திற்கு ஆறு முறை இலவச VIP விமான நிலைய ஓய்வறை அணுகலும் வழங்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X