2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொமர்ஷல் வங்கி சிக்கலான காலாண்டை கடந்தது

S.Sekar   / 2022 மே 23 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி 2022ன் முதலாவது காலாண்டு முடிவில் சமநிலையான நிதிச் செயற்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது. மிகக் கூர்மையான நாணய மதிப்பிறக்கம் பிரதான செயற்பாட்டு சுட்டெண்களை சாதகமாகவும் பாதகமாகவும் பாதித்துள்ள வேளையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட தனியார் கொமர்ஷல் வங்கி, அதன் கிளைகள் மற்றும் இணை நிறுவனங்களை உள்ளடக்கியதே கொமர்ஷல் வங்கிக் குழுமம். 2022 மார்ச் 31ல் முடிவடைந்த மேற்குறிப்பிட்ட காலாண்டில் இந்தக் குழுமத்தின் மொத்த வருமானம் 54.573 பில்லியன் ரூபாய்களாகப் பதிவாகி உள்ளது. மொத்த செயற்பாட்டு வருமானம் ரூ. 34.244 பில்லியன்களாகும். தேறிய செயற்பாட்டு வருமானம் ரூ. 28.284 பில்லியன்களாகும். இது முறையே 33.41 வீதம், 41.74 வீதம் மற்றும் 66.33 வீதம் அதிகரிப்பாகும்.

2022 மார்ச்சில் அவதானிக்கப்பட்ட முன்னொருபோதும் இல்லாத நாணய மதிப்பிறக்க நிலையில் வெளிநாட்டு நாணய ஆதிக்க சொத்து வரிசையில் வருடத்துக்கு வருட வட்டி அதிகரிப்பு குறிப்பிட்ட மூன்று மாத காலத்தில் 19.41 வீதமாக அதிகரித்து ரூ. 37.847 பில்லியன்களாக உள்ளது. வட்டி செலவினங்கள் கூட வருடத்துக்கு வருட வைப்புக்களின் வளர்ச்சி அதிகரிப்பு காரணமாகவும், துல்லியமான நாணய மதிப்பிறக்கம் காரணமாக வெளிநாட்டு நாணயக் கடன்களின் அதிகரிப்பு காரணமாகவும், வைப்புக்கள் மீதான வட்டிச் செலவினங்களில் கணிசமான அதிகரிப்பு காரணமாகவும் 17.30 வீதமாக அதிகரித்து ரூ. 19.024 பில்லியன்களாக உள்ளது. இதன் காரணமாக குழுமத்தின் தேறிய வட்டி வருமானம் முதல் காலாண்டில் ரூ. 18.823 பில்லியன்களாக உள்ளது. இது 21.62 வீத வளர்ச்சியாகும்.

இந்தக் காலாண்டு மீளாய்வு பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கி தலைவர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன 'இலங்கையில் வர்த்தகத் துறைக்கு இது வழமைக்கு மாறான காலப் பகுதியாகும் குறிப்பாக வங்கிகளுக்கு. இந்தப் பிரிவில் மிக விரிவான விதிவிலக்கான புத்திசாலித் தனம் அவசியமாகின்றது. முதல் காலாண்டின் எமது பெறுபேறுகள் வங்கியில் காணப்படும் எமது முகாமைத்துவ ஆற்றலின் ஆழத்தைப் பிரதிபலிக்கின்றன' என்று கூறினார்.

வங்கியில் புதிதாக நியமனம் பெற்ற பிரதான நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான சனத் மானதுங்க 'இலங்கை ரூபாயின் முன்னொருபோதும் இல்லாத நாணய மதிப்பிறக்கம் வருமானத்தையும் இலாபத்தையும் அத்தோடு முக்கிய ஐந்தொகை சுட்டெண்களையும் பாதிக்கக் கூடியவை. செயற்பாடுகளில் இது திரிபு படுத்தும் விளைவுகளை ஏற்படுத்தலாம். இருந்தபோதும் நாம் திடமான பெறுபேறுகளை சமர்ப்பித்துள்ளோம். வெளிக்காரணங்களில் ஏற்படும் துரித மாற்றங்களால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கு நாம் தொடர்ச்சியான துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்' என்று கூறினார்.

குழுமத்தின் தேறிய செயற்பாட்டு வருமானம் 2021ன் முதல் காலாண்டில் ரூ. 17.005 பில்லியன்களாக இருந்து, இந்தக் காலாண்டில் ரூ. 28.284 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. இது 66.33 வீத வளர்ச்சியாகும். இந்த மூன்று மாத காலத்தில் செயற்பாட்டு செலவினம் ரூ. 8.721 பில்லியன்களாகும். இது தேறிய செயற்பாட்டு வருமானத்தில் எட்டப்பட்ட 66.33 வீத வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் 23.66 வீத குறைவான அதிகரிப்பாகும். நிதிச் சேவைகள் மீதான வரிக்கு முந்திய செயற்பாட்டு இலாபமாக குழுமம் ரூ. 19.563 பில்லியன்களைப் பதிவு செய்துள்ளது. இது அதி உயர் மட்ட 96.56 வீத அதிகரிப்பாகும்.

குறிப்பிட்ட காலாண்டுக்கான (பெறுமதி சேர்) VAT வரி இரட்டிப்பை விட அதிகமாகி ரூ. 3.155 பில்லியன்களாக உள்ளது. இலாபங்கள் மீதான VAT அதிகரிப்பு மற்றும் 2022 ஜனவரி 1 முதல் 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக VAT அதிகரிப்பு என்பன காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் இந்த மூன்று மாத காலத்தில் 95.21 வீதமாக அதிகரித்து ரூ. 16.406 பில்லியன்களாக உள்ளது.

குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபமாக குறிப்பிட்ட காலப்பகுதியில் ரூ. 11.775 பில்லியன்களாகப் பதிவாகி உள்ளது. இது 73.23 வீத அதிகரிப்பாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .