Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 17 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியின் 'திரிபல அடுத்த தலைமுறை பாடசாலை தொழில்முயற்சியாளர் சீராக்கல் திட்டத்தின்' கீழ் நடத்தப்பட்ட இரண்டு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டங்களை கம்பஹாவிலுள்ள யசோதரா தேவி பாலிகா வித்தியாலயத்தின் தொழில்முயற்சியாளர் வட்டத்தின் மாணவர்கள் குழு ஒன்று அண்மையில் நிறைவு செய்தது.
இதற்கிணங்க கைத்தொழில் அபிவிருத்தி சபையின் (IDB) வளவாளர்களால் நடத்தப்பட்ட 'வீடளாவிய மட்டத்தில் வெதுப்பக பொருட்களை உற்பத்தி செய்தல்' மற்றும் 'அழகு கலாசாரப் பயிற்சி' ஆகிய இரண்டு திறன் மேம்பாட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இரண்டு நாள் நிகழ்ச்சித் திட்டத்தில் கருத்துரை வழங்கிய கொமர்ஷல் வங்கியின் தனிப்பட்ட வங்கியியலின் பிரதிப் பொது முகாமையாளர் திலக்ஷன் ஹெட்டியாராச்சி, நாட்டின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கினை வகிப்பதாக தெரிவித்தார். இளம் தொழில்முயற்சியாளர்களை ஆதரிப்பதானது புத்தாக்கங்களை வளர்ப்பதற்கும், தேசத்திற்கு வலுவான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குவதற்கும் முக்கியமானது என்றார்.
கொமர்ஷல் வங்கியின் திரிபல அடுத்த தலைமுறை பாடசாலை தொழில்முயற்சியாளர் சீராக்கல் நிகழ்ச்சித் திட்டமானது, பாடசாலை தொழில்முயற்சியாளர்களை வலுப்படுத்தவும், பாடசாலை தொழில் முயற்சியாளர் வட்டங்களிடையே புதிய மாற்றத்திற்கான மனநிலையை வளர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யும் இந்த திட்ட நிகழ்வுகளின் போது மாணவர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், நிதியியல் கல்வியறிவை மேம்படுத்தவும், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்களில் மாணவர்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும், வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் இந்த முயற்சியில் பாடசாலை மாணவர்களுக்கான வர்த்தக வழிகாட்டுதலும் அடங்குகிறது.
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Oct 2025
18 Oct 2025