Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
VISA கொழும்பில் முன்னெடுத்திருந்த VISA Commercial Solutions Client Forum இல், உள்நாட்டு சந்தையில் வீசாவின் கூட்டாண்மை அட்டைகள் தொடரை அறிமுகப்படுத்துவதில் கொமர்ஷல் வங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை அங்கிகரிக்கும் வகையில் 'வசதியான மற்றும் பெருந்திரளான கூட்டாண்மை அட்டை வகைகளை அறிமுகப்படுத்துவதில் சிறந்து விளங்கியமை' என்பதற்காக கௌரவிக்கப்பட்டது.
VISA Commercial Solutions Excellence விருதானது VISA இன் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான வதிவிட முகாமையாளர் திருமதி அவந்தி கொலம்பகே இனால் வழங்கப்பட்டதுடன் இவ்விருதை வங்கியின் சார்பாக பிரதி பொது முகாமையாளர் - கூட்டாண்மை வங்கியியல் தமரா பேர்னார்ட் பெற்றுக்கொண்டார்.
கொமர்ஷல் வங்கியானது அண்மையில் இலங்கையில் கூட்டாண்மை மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களுக்காக VISA சிக்னேச்சர் மற்றும் VISA பிளாட்டினம் கூட்டாண்மை கடன் அட்டைகளை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த புதிய தயாரிப்பானது கூட்டாண்மை நிறுவனங்களுக்கு ஊழியர்களின் செலவுகளை நிர்வகிக்க உதவுவதுடன் இந்த அட்டையானது ஒவ்வொரு நிறுவனத்தின் கூட்டாண்மை கடனட்டை கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டாண்மை நிறுவனங்களின் ஊழியர்கள், அந்தந்த நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட பயணம், பொழுதுபோக்கு மற்றும் பிற செலவுகளுக்கு உலகில் எப்பகுதியில் இருந்தும் பணத்தினை செலுத்த இந்த அட்டைகளைப் பயன்படுத்தலாம். மேலும் VISA சிக்னேச்சர் கூட்டாண்மை கடனட்டைகளும் தங்கள் பயனர்களுக்கு சர்வதேச விமான நிலையங்களில் ஓய்வறை அணுகல் மற்றும் பயணம் தொடர்பான விடயங்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன.
கொமர்ஷல் வங்கி இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி மற்றும் உலகின் சிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும். கொமர்ஷல் வங்கி திறன்மிகு முறையில் அமையப்பெற்ற கிளை வலையமைப்புக்கள் மற்றும் 964 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது, அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.
53 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
57 minute ago