2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் 5வது ’அருணலு சித்திரம்’ போட்டி

Freelancer   / 2024 ஜூலை 26 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கொமர்ஷல் வங்கி நடாத்தும் சிறுவர் ஓவியப் போட்டியான 'அருணலு சித்திரம்' ஐந்தாவது முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள இலங்கை சிறுவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை சிறுவர்கள் மீண்டும் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்தி பணப் பரிசில்களை வெல்ல முடியும். வெற்றியாளர்களுக்கு 2.4 மில்லியன் ரூபாய் பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

நான்கு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக, வங்கியின் புகழ் பெற்ற குழந்தைகள் சேமிப்புக் கணக்கான 'அருணலு' பதாகையின் கீழ் இந்தப் போட்டி இணையத்தள ரீதியில் நடத்தப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.

அருணலு சித்திரம்' மீண்டும் மொத்தமாக 142 இளம் கலைஞர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் 250 போட்டியாளர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை வழங்கவுள்ளது. அனைத்து உள்ளீடுகளும் 31 ஆகஸ்ட் 2024 அன்று அல்லது அதற்கு முன்னதாக இணையத்தளத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் தொடர்புடைய விபரங்களுடன் தங்கள் வரைபடத்தின் ஸ்கான் செய்யப்பட்ட நகலைப் பதிவேற்றலாம். ஓவியங்கள் JPEG வடிவத்தில் இருக்க வேண்டும் எனவும் மற்றும் கோப்பின் அளவு 5MB களை விட அதிகமாக இருக்கக்கூடாது எனவும் வங்கி தெரிவித்துள்ளது. ஒருவர் ஒரு ஓவியத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். மேலும் சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்கள் வேறு எப்போட்டிக்கும் சமர்பிக்கப்படாத அசலானதாக இருத்தல் வேண்டும்.

போட்டியாளர்கள் தங்கள் வரைபடங்களை ஐந்து பிரிவுகளின் கீழ் சமர்ப்பிக்கலாம்: முன் ஆரம்பப்பள்ளி (வயது 4-5), ஆரம்பப்பள்ளி (வயது 6-7), பிந்தைய ஆரம்பப் ஆரம்பப்பள்ளி (வயது 8-10), கனிஷ்டப் பிரிவு (வயது 11-13), மற்றும் சிரேஷ்ட பிரிவு (வயது 14- 16) என்பனவே அவை. முன் ஆரம்பப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி பிரிவுகளில் போட்டியிடும் போட்டியாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த தலைப்பிலும் வரைவதற்கு உரித்துடையவர்களாவர். அதேவேளையில், பிந்தைய ஆரம்பப்பள்ளி, கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் பங்கேற்பவர்கள் முறையே கிராமிய மக்கள், 'சடங்குகள், சம்பிரதாயங்கள்' மற்றும் எங்கள் 'கலாசார அம்சங்கள்' ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஓர் தலைப்பினை தேர்ந்தெடுத்து வரையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மூன்று இளைய வயது பிரிவினருக்கான காகித அளவு A3 ஆகும், அதே சமயம் இரண்டு வயது கூடிய குழுக்களில் உள்ள போட்டியாளர்கள் 14x18 அங்குல காகிதத்தைப் பயன்படுத்த வேண்டும்.

போட்டியாளர்கள் ஒட்டும் மற்றும் உலர்த்தாத வண்ணப்பூச்சு வகைகளைத் தவிர்த்து, தாளில் தங்கள் சிந்தனைகளை வண்ணமயமாக்க, தங்களுக்கு விருப்பமான வர்ணப்பூச்சுகளை தெரிவு செய்யலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு முன்பள்ளி பிரிவில் மிகவும் ஆக்கப்பூர்வமான சித்திரங்களைச் சமர்ப்பிக்கும் இளைய போட்டியாளர்களில் 25 பேருக்கு சான்றிதழ்களுடன் தலா ரூ. 10,000 பணப்பரிசில் வழங்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. இந்தப் பிரிவில் மேலும் 50 திறமைசாலிகளுக்கு தகுதிச் சான்றிதழ்களைப் பெறுவார்கள்.

மற்றைய நான்குஉள்நாட்டு வயதுப் பிரிவுகளில் முதலிடத்தைப் பெறும் ஓவியங்களுக்கு தலா ரூ.100,000 பணப் பரிசில், இந்தப் பிரிவுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ. 75,000 மற்றும் ரூ. 50,000 பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

உள்நாட்டு பிந்தைய ஆரம்பப்பள்ளி, ஆரம்பப் பள்ளி, கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 25 போட்டியாளர்கள், சான்றிதழ்களுடன் தலா ரூ. 10,000 பணப்பரிசிலுடன் சிறந்த விருதுகளையும் பெறுவார்கள். இந்த நான்கு பிரிவுகளில் இருந்து மேலும் 50 போட்டியாளர்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்படும். போட்டியின் முடிவுத் திகதியில் தற்போதுள்ள கொமர்ஷல் வங்கி அருணலு மற்றும் இசுறு கணக்கு வைத்திருப்பவர்கள் பணப்பரிசிலினை பெறும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிறப்புப் பரிசைப் பெறுவார்கள் என்று வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த வயதுப் பிரிவுகளில் உள்ள எந்தவொரு பிள்ளையும் அவர்கள் கொமர்ஷல் வங்கியின் கணக்கினை வைத்திருப்பவர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் போட்டியில் பங்கேற்கலாம்.

இதேவேளை, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை சிறுவர்கள் அனைத்துப் பிரிவுகளிலும் வரைந்த சிறந்த சித்திரம் ஒவ்வொன்றுக்கும் ரூ. 50,000 பணப்பரிசில் வழங்கப்படும்.

சமர்ப்பிக்கப்படும் ஓவியங்களுக்கான அனைத்து உரிமைகளும் வங்கியைச் சேரும் எனவும், வெற்றியாளர்கள் தொடர்பாக அனுபவம் வாய்ந்த நடுவர்கள் குழு எடுக்கும் தீர்மானமே இறுதியானதாக இருக்கும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X