Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி வெளிநாட்டு நாணய விஷேட நிலையான வைப்புக் கணக்குத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாட்டு மூலங்களில் இருந்து முதலீடுகளை கவருவதற்கான ஒரு மேலதிக செயற்பாடாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘Forex Plus’ என்று அழைக்கப்படும் இந்தப் புதிய திட்டம் ஐந்தாண்டுகள் வரையான வைப்புக் காலத்துக்கு வருடாந்தம் 9 வீதம் வரையான வட்டியை வழங்குகின்றது. இத்திட்டத்தில் நான்கு வகையான வெளிநாட்டு நாணயங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையின் இன்றைய பொருளாதார சூழலில் மிகவும் அவசியமான வெளிநாட்டு நாணய முதலீட்டைக் கருத்தில் கொண்டே Forex Plus திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தமது வாடிக்கையாளர்கள் போட்டிமிக்க சூழலில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த வெளிநாட்டு பணத்தை மிகவும் நம்பிக்கையான பின்னணியில் சேமிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதும் இதன் நோக்கமாகும் என்று வங்கி அறிவித்துள்ளது.
இந்த வெளிநாட்டு நாணய வைப்புக் கணக்கை இலங்கையர்கள் அல்லாதவர்களும், இரட்டை பிரஜா உரிமை கொண்ட இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கும் இலங்கையில் நிரந்தர வதிவிட வசதி உடையவர்கள், கடல் கடந்த நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள், கடல்கடந்த நாடுகளில் ஒருங்கிணைக்கப்பட்ட கம்பனிகளில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆரம்பிக்கலாம்.
இந்த தகுதிகள் உடையவர்கள் தமது Forex Plus வெளிநாட்டு நாணய கணக்கை குறைந்த பட்சம் 5000 அமெரிக்க டொலருடன் அல்லது அதற்கு ஈடான யுரோ, ஸ்டேர்லிங் பவுண் அல்லது அவுஸ்திரேலிய டொலரில் மூன்று அல்லது ஐந்தாண்டு காலத்துக்குரிய வைப்பாகத் திறக்கலாம். வைப்புச் செய்யப்படும் வெளிநாட்டு பணத்தின் வகை மற்றும் அதற்கான காலம் என்பனவற்றின் அடிப்படையில் வட்டி வீதம் தீர்மானிக்கப்படும். தன்னிச்சையாகப் புதுப்பிக்கப்படும் வகையில் இந்த வைப்புத் திட்டம் அமையும் என்று வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் மூலமான வைப்பு ஐந்தாண்டு காலத்துக்கு அமையும் பட்சத்தில் வருடாந்தம் 9.5 வீத வட்டியைப் பெற்றுக் கொள்ள முடியும். இதே காலப்பகுதிக்கு யூரோ மற்றும் ஸ்டேர்லிங் பவுணுக்கு வருடாந்தம் 6 வீத வட்டி வழங்கப்படும். அவுஸ்திரேலிய டொலருக்கு வருடாந்த 7 வீத வட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் ஆரம்பம் முதல் இந்த வட்டி வீதம் செல்லுபடியாகும். வங்கி மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு அமைய காலத்துக்கு காலம் இது மாற்றம் அடையலாம் என்றும் வங்கி மேலும் அறிவித்துள்ளது.
Forex Plus க்கான வைப்புக்களை, வங்கி முறைமைகள் மூலம், வெளிநாட்டு நாணயமாற்றின் மூலம், கணக்கு வைத்திருப்பவரின் சொந்த வெளிநாட்டுக் கணக்கின் மூலம், கணக்கு வைத்திருப்பவருக்கு அனுப்பப்படும் பணத்தின் மூலம், உள்ளக முதலீட்டுக் கணக்கின் மூலம், கடல்கடந்த வங்கி அலகின் மூலம், உள்ளக வங்கி வரவுச் செயற்பாடுகள் மூலம், கணக்கு வைத்திருப்பவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முறையான அனுமதியுடன் நாட்டுக்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பணத்தின் மூலம் செய்ய முடியும்.
18 minute ago
23 minute ago
27 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
27 minute ago
41 minute ago