2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் பண்டிகைக்கால ஊக்குவிப்பு திட்டம்

Freelancer   / 2024 பெப்ரவரி 26 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கொமர்ஷல் வங்கி, தனது டெபிட் அட்டைகளுக்கு இந்த பண்டிகைக் காலத்தில் அதிக செலவு செய்பவர்களுக்கு ரூ. 6 மில்லியன் பெறுமதியான பரிசில்களை வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.


கொமர்ஷல் வங்கியின் இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இருவருக்கு சிங்கப்பூரில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய விடுமுறை, உயர்தர மடிக்கணினிகள், இரட்டை பகிர்வுடன் கூடிய சொகுசு ஹோட்டலில் தங்கக்கூடிய வசதி, மற்றும் ஒவ்வொன்றும் ரூ. 50,000 பெறுமதியான 20 சுப்பர் மார்க்கெட் வவுச்சர்கள், என்பன டெபிட் அட்டை பயனர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறுவதற்கு டெபிட் அட்டைதாரர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 25,000 அல்லது அதற்கு மேற்பட்ட பெறுமதியில்  கொள்வனவுகளை செய்திருக்க வேண்டும் என வங்கி தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் ரமழான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள மாதாந்த சீட்டிழுப்புகளில்; மேற்படி பரிசில்களுக்குரிய அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கொமர்ஷல் வங்கியின் அட்டை நிலையத்தின்  தலைவர் நிஷாந்த டி சில்வா இது தொடர்பாக தெரிவிக்கையில், 'இந்த கொமர்ஷல் வங்கி டெபிட் அட்டை பரிசில் பண்டிகைக்கால பிரசாரத்தின் நோக்கமானது எமது விசுவாசமிக்க டெபிட் அட்டை பயனர்களுக்கு வெகுமதி அளிப்பதுடன் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு பணத்துக்கு பதிலாக டெபிட் அட்டைகளை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிப்பதுமாகும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .