2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் மகளிர் தினக் கொண்டாட்டம்

Freelancer   / 2024 மார்ச் 25 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி சர்வதேச மகளிர் தின நிகழ்வின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்திருந்த அறிவு பகிர்வு அமர்வில் 200 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர பெண் தொழில்முயற்சியாளர்கள் (WSMEs) கலந்து கொண்டனர்.

வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, பெண் வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேகமான வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பிரிவான 'அணகி' ஆதரவளித்தது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக (La Vivente (Pvt) Ltd) இன் இணை ஸ்தாபகரான கலாநிதி டிலீஷா பெரேராவும், மேலும் கலாநிதி சாரங்க அழகப்பெரும - கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) தலைவர், திருமதி நயோமினி வீரசூரிய - சற்றின் சஞ்சிகையின் ஸ்தாபகர் மற்றும் திருமதி. சேபாலிகா ஜயவர்தன - பிராந்திய அபிவிருத்தி பணிப்பாளர் - ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியோர் குழு உறுப்பினர்களாகவும் கலந்து கொண்டனர். அறிவு-பகிர்வு அமர்வின் விளக்கக்காட்சிகள், கைத் தொழில்துறை நுண்ணறிவு, விபரங்கள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை அமைப்பது தொடர்பான வழிகாட்டல், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) வர்த்தகங்களுக்கான உள்நாட்டு அதிகாரசபைகளுடனான பரிவர்த்தனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் அமர்வில், அழைப்பாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர் மற்றும் சிரேஷ்ட, கூட்டாண்மை முகாமைத்துவ அங்கத்தவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வானது பெண்களின் அதிகாரசக்திக்கு வங்கி வழங்கிய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

கொமர்ஷல் வங்கியின் அணகி மகளிர் வங்கியியல் பிரிவானது சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்துடன் (IFC) இணைந்து IFC-DFAT பெண்கள் வேலைத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான சேவைப் பிரிவான பெண்களுக்கான நிதிக்கான அணுகலை அதிகரிப்பதில் நவீன நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி செயற்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X