2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கியுடனான பங்காண்மை கொண்டாட்டம்

S.Sekar   / 2022 ஏப்ரல் 18 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் ஒரு தசாப்த காலமாகத் தொடரும் பாங்கசூரன்ஸ் பங்காண்மைக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், கொமர்ஷல் வங்கியின் பாங்கசூரன்ஸ் வியாபாரத்துக்காக வருடாந்த விருதுகள் வழங்கும் வைபவமொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.  அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சிறப்பாக செயலாற்றியிருந்த கொமர்ஷல் வங்கியின் பிராந்தியங்கள், கிளைகள் மற்றும் ஊழிய அங்கத்தவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

தொழிற்துறையின் முன்னோடியான பாங்கசூரன்ஸ் சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி இடையிலான பங்காண்மை, கடந்த காலங்களில் பெருமளவில் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

இந்தப் பங்காண்மையைப் பொறுத்தமட்டில் 2021 ஆம் ஆண்டு என்பது விசேட வருடமாக அமைந்திருந்தது. இலாகாவினுள் இரு புதிய உள்ளம்சங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இதனூடாக எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தீர்வுகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தன. டிஜிட்டல் பிரிவில் இந்த பங்காண்மை தொடர்ந்தும் வியாபிக்கும் என்பதுடன், தற்போதைய நெருக்கடியான சூழலிலும் வாடிக்கையாளரின் பயணத்துக்கு ஒப்பற்ற மற்றும் சௌகரியமான வகையில் ஆதரவளிக்கப்படும். மேலும், இந்தப் பங்காண்மை அதியுயர் உற்பத்தி மற்றும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையிலான வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், வங்கிக்கும் பெருமளவு கட்டண வருமானத்தை ஏற்படுத்தியிருந்தது.

2021 ஆம் ஆண்டில், இலங்கையின் முதல் தர பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவாகியிருந்தது. ரூ. 1 பில்லியனுக்கு அதிகமான ANBP பெறுமதியை பதிவு செய்திருந்தது.

கொமர்ஷல் வங்கி அணியினருக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் நன்றி தெரிவித்ததுடன், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார். “இந்தப் பங்காண்மை சிறப்பாக அமைந்திருந்தது, சிறப்பாக செயலாற்றியவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டை கௌரவிக்கும் வகையில் எமது விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்திருந்தது.” என்றார்.

2021 ஆம் ஆண்டு தொழிற்துறைக்கு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்திருந்தாலும், சில முக்கியமான பிரிவுகளில் பெருமளவு வளர்ச்சியை யூனியன் அஷ்யூரன்ஸ் பதிவு செய்திருந்தது. இதில் பாங்கசூரன்ஸ் வியாபாரமும் அடங்குகின்றது. இதனூடாக சந்தையின் தலைமைத்துவ நிலையை மேலும் பேணியிருந்தது.

இலங்கையரின் கனவுகளுக்கு வலுச் சேர்ப்பதுடன், அதிகளவு புத்தாக்கமான தீர்வுகளுடன் வாக்குறுதிகளையும் நிறுவனம் வழங்கியிருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கொமர்ஷல் வங்கி நாளிகைக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். “சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்வதில் சேவைச் சிறப்பு என்பது மிகவும் முக்கியமான அங்கமாக அமைந்துள்ளது.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்கிப் பங்காளர்களுடன் நம்பிக்கை மற்றும் நேர்மை என்பதன் அடிப்படையில் உறுதியான பங்காண்மைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் கட்டியெழுப்பியுள்ளது. நிறுவனத்தின் பிரிவுப் பெறுமதிகளை பாங்கசூரன்ஸ் பங்காண்மைகள் மேம்படுத்தியுள்ளதுடன், நிலைபேறான வியாபார வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கியுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .