2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

கொள்கை இல்லையெனில் உதவியும் இல்லை

Freelancer   / 2022 மே 25 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறுதியான பொருளாதாரக் கொள்கை ஒன்றை நிறைவேற்றும் வரையில் இலங்கைக்கு புதிய நிதி வசதிகள் எதனையும் வழங்காதிருக்க முடிவு செய்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மக்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இதர அபிவிருத்திப் பங்காளர்களுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமிருப்பதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அவசியமான மருந்துப் பொருட்கள், பின்தங்கிய வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, விவசாயிகள் மற்றும் சிறிய வியாபாரங்களுக்கு அவசியமான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது போன்றவற்றுக்கு அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க, ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட திட்டங்களை மீளத் தயார்ப்படுத்திய வண்ணமிருப்பதாகவும் உலக வங்கி அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .