Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 07 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்கு ஆசியாவின் பாரியளவிலான சர்வதேச ஆடைக் கண்காட்சியான தென்கிழக்காசியாவின் நான்காவது தொடர் கண்காட்சி அடுத்த வாரம் கொழும்பு 07, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சி இந்தியாவின் வேர்ல்ட் டெக்ஸ் இந்தியா கண்காட்சி மற்றும் மேம்பாட்டு கம்பனியால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான அனுசரணை மற்றும் உதவிகள் இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை, இலங்கை தேசிய வர்த்தக சபை மற்றும் ஒருங்கிணைந்த ஆடைகள் உற்பத்தி ஒன்றியம் மற்றும் அதன் வர்த்தக நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்டெக்ஸ் சவுத் ஏசியா மூலம் ஒரே கூரையின் கீழ் சேவைகளைப் பெற்றுக்கொண்டு, உலகளவிலான ஆடை உற்பத்தியாளர்களுக்காக வளங்கள் மற்றும் வர்த்தக விநியோகங்கள் சர்வதேச விநியோகங்கள் மற்றும் கொள்வனவுக்கான இடங்களை வழங்குதல், வீடுகளைக் கொள்வனவு செய்தல், ஆடைகளுக்கான வியாபார குறியீட்டுப் பெயர்கள் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளுக்கான நூல் வகைகள், ஆடைத்துணிகள், டெனிம் துணிகள், ஆடைகளுக்கு தேவையானவைகள், வர்ணங்கள், இரசாயனப் பொருட்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய சேவைகள் என்பவற்றை உலகம் முழுவதிலும் உள்ள தரப்படுத்தப்பட்ட வழங்குநர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.
2015ஆம் ஆண்டு அதன் ஆரம்பம் தொடக்கம் இன்டெக்ஸ் சவுத் ஏசியா பிரபலமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாடுகள் மற்றும் 30 பிராந்தியங்களுக்கும் அதிகமான குறிப்பிட்ட துறையில் கொள்வனவாளர்கள் மற்றும் வழங்குநர்களுடன் மிகவும் வெற்றியாக இணைந்து வருடா வருடம் தமது சர்வதேச கொள்வனவாளர்கள் மற்றும் காட்சிப்படுத்துனர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரித்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பாரிய சர்வதேச ஆடை வழங்கலுக்கான கண்காட்சியாக பரிணமித்துள்ளது.
தென்கிழக்காசியாவிலும் மற்றும் வேறு சர்வதேச சந்தைகளிலும் உள்ள பிரதான கொள்வனவாளர்களுக்கு நவீன ஆடைகளைக் காட்சிப்படுத்துவதற்கும் அவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் இயன்ற வகையில் இவ்வாண்டில் 15 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து 250க்கும் அதிகமான சர்வதேச வழங்குநர்கள் இதில் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரே துறையைச் சேர்ந்த தொழில் நிபுணர்கள் 03 நாட்கள் ஒருவரையொருவர் மிகவும் நெருக்கமாக சந்தித்துப் பழகி செயற்பட்டனர்.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்இ ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஓமான், முருசி, இத்தாலி, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்ஸ், அமெரிக்கா, ஹொங்கொங், மலேசியா, சீனா, தாய்வான், கொரியா, தாய்லாந்து உட்பட ஏனைய நாடுகளின் கொள்வனவாளர்களின் கலந்துகொள்ளல் 30% ஆகக் காணப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago