Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 மார்ச் 19 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபையின் (CMC) தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் SLT-MOBITEL இணைந்து, eChannelling சேவையூடாக கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு நபர்களை பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கையை சௌகரியமாக மேற்கொள்ளக்கூடிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டத்தின் அங்கமாக, கொழும்பு நகர எல்லையினுள் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் இந்த வசதியை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த தேசிய ஒன்றிணைவு தொடர்பாக மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரன கருத்துத் தெரிவிக்கையில், “நவீன இணைப்பு தீர்வுகளினூடாக தேசத்தையும், குடிமக்களையும் மேம்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ள நிறுவனம் எனும் வகையில், கொழும்பு மாநகர சபையுடன் கைகோர்த்து இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய பணிக்கு எமது சேவைகளை இந்த வழிமுறையினூடாக வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக பொது மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக திகழச் செய்வதற்கு பங்களிப்பு வழங்க முடிந்துள்ளது. முதற் கட்டமாக இந்த வசதி கொழும்பு நகர எல்லையினுள் மாத்திரம் கிடைப்பதுடன், நாடு முழுவதிலும் தடுப்பூசி வழங்கும் பணிகள் விஸ்தரிக்கப்படும் போது, இந்தச் சேவைகளையும் விஸ்தரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.” என்றார்.
60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு eChannelling இணையத்தளமான www.echannelling.com அல்லது கொழும்பு மாநகர சபை இணையத்தளமான www.colombo.mc.gov.lk, ஊடாக அல்லது eChannelling Mobile App ஐ பயன்படுத்தி ‘COVID Vaccination’எனும் தெரிவை அழுத்தி, தமது வசிப்பிடத்துக்கு பொருத்தமான தடுப்பூசி வழங்கும் நிலையத்தை தெரிவு செய்து தம்மை பதிவு செய்து கொள்ளலாம்.
இதன் போது வாடிக்கையாளர்கள் தமக்கு பொருத்தமான நேரத்தையும் தெரிவு செய்து கொள்ள முடியும். தமது பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மொபைல் இலக்கம் போன்ற தரவுகளை பதிவு செய்ய வேண்டும். குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்துக்கு SMS ஊடாக OTP அனுப்பி வைக்கப்படும். அதனை உறுதி செய்த பின்னர், SMS ஊடாக பதிவு உறுதி செய்யப்பட்ட அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்படும்.
28 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago