S.Sekar / 2022 ஜனவரி 17 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
St. Anthony’s Hardware கட்டடம் அமைந்திருந்த இல. 516, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10 எனும் முகவரியில் ‘HOMEMART’ திறக்கப்பட்டுள்ளது.

சென். அந்தனீஸ் குழுவின் துணை நிறுவனமாக HOMEMART திகழ்கின்றது. இலங்கையின் ஒரே ஹார்ட்வெயார் மற்றும் ஹோம்வெயார் சுப்பர்மார்கெட்டாக திகழும் HOMEMART, 2017 ஆம் ஆண்டில் தனது முதலாவது காட்சியறையை நாவல பிரதேசத்தில் திறந்து பெருமளவு வரவேற்பையும், புகழையும் பெற்றுள்ளது. தேசத்தின் நம்பிக்கையை வென்ற பல வர்த்தக நாமங்களை காட்சிப்படுத்தியுள்ளதுடன், கவர்ச்சிகரமான விலைகளில் இவை அமைந்துள்ளன. கொழும்பையும், அதனை அண்மித்த பகுதிகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களின் சகல ஹார்ட்வெயார் மற்றும் ஹோம்வெயார் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் புதிய HOMEMART காட்சியறை அமைந்துள்ளது.
சென். அந்தனீஸ் ஹார்ட்வெயார் பிரைவட் லிமிடெட் தவிசாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் பிரவீன் ஞானம் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் பணிப்பாளினி திருமதி. ஷிராணி ஞானம், பணிப்பாளர். தயானந்தன், பணிப்பாளரும் பொது முகாமையாளருமான சரத் கமகே மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த திறப்பு விழாவில் முகாமைத்துவ பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், “1942 ஆம் ஆண்டில், எனது பாட்டனார் ஏ.வை.எஸ்.ஞானம் அவர்கள், சென். அந்தனீஸ் குழுமத்தை நிறுவிய முதல் பகுதியாக இது அமைந்துள்ளது. அவர் இங்கு பணியாற்றியிருந்தார், தமது வியாபாரத்தை இங்கே கட்டியெழுப்பியிருந்தார். அதுமட்டுமன்றி, அவரும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்தது இந்த கட்டடத்தில். அவர் கட்டியெழுப்பிய முதல் இல்லமாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. அது போலவே, St. Anthony’s நிறுவனத்தில் பணியாற்றிய அனைவரும் அவருடைய குடும்ப அங்கத்தவராக கருதப்பட்டனர். எனவே, இந்த பழைய கட்டடம், சென். அந்தனீஸ் நாமத்தின் ஸ்தாபிப்பிடம், புதிய உருப்பெற்று HOMEMART ஆக மாற்றம் பெற்றுள்ளமை மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.” என்றார்.
10,000 க்கும் அதிகமான ஹார்ட்வெயார் மற்றும் ஹோம்வெயார் தயாரிப்புகளை 200க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச விநியோகத்தர்களுடன் இணைந்து, நூற்றுக் கணக்கான வர்த்தக நாமங்களில் HOMEMART கொண்டுள்ளது. HOMEMART இல் சகலருக்கும் தமது அத்திவாரத்துக்கான கொங்கிறீற் தேவை முதல் கூரையில் சூரிய மின்படல்கள், குழாய்கள் முதல் பெயின்ட்கள் வரை, கூரைத் தகடுகள் முதல் இயந்திர சாதனங்கள், இலத்திரனியல் முதல் தினசரி வீட்டுப் பாவனைப் பொருட்கள், குளியலறை சாதனங்கள் முதல் பாரிய தோட்டத் தெரிவுகள், பிளென்டர்கள், அடுப்புகள், வெக்கியும் கிளீனர்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பான் போன்ற வீட்டு மின்சாதனங்கள் போன்றன அடங்கியுள்ளன. வாடிக்கையாளர்களின் சகல தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்யக்கூடிய, இலங்கையில் காணப்படும் மாபெரும் ஹார்ட்வெயார் மற்றும் ஹோம்வெயார் சுப்பர் மார்கெட்டாக HOMEMART அமைந்துள்ளது.
முன்னர் வாடிக்கையாளர்களுக்கு தமக்கு தேவையான பல்வேறு ஹார்ட்வெயார் பொருட்களை வெவ்வேறு வர்த்தக நாமங்களில் தேடி கடைத் தெருவிலும், வெளி மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்கும் என்பதுடன், டிலிவரி, முன்கூட்டியே ஓடர் செய்யும் வசதி அல்லது பிக்அப் செய்யும் வசதியை HOMEMART கொண்டுள்ளது. வேலைப்பளு நிறைந்த நிபுணர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் HOMEMART வடிவமைக்கப்பட்டுள்ளது.
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025