2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

செங்கா டயர்கள் அறிமுகம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோட்டஸ் டயர்களை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் சம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனம் தனது பெறுமதி மிக்க விநியோக முகவர்களையும் விற்பனை நிலைய உரிமையாளர்களையும் கௌரவிக்கும் வகையில் வண்ணமயமிக்க ஒன்றுகூடலொன்றை அண்மையில் நடாத்தியது. அந்நிகழ்வில் லோட்டஸ் டயரின் புதிய உற்பத்தியான ‘4.50-10 செங்கா’ முச்சக்கர வண்டிகளுக்கான டயர் வகை அறிமுகப்படுத்தப்பட்டது.  

இந்த விழா பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்ததோடு, லோட்டஸ் டயர்களை விநியோகித்து வரும் விற்பனை முகவர்களுக்கென நடாத்தப்பட்ட The Best Dealer போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்குரிய பெங்கொக் சவாரிக்கான விமானச் சீட்டுகளும் இதன் போது வழங்கப்பட்டன.

பெங்கொக் சவாரிக்கான விமானச் சீட்டுகளை பெற்றவர்கள் இன்றளவில் தமது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கென நடாத்தப்பட்ட Cash Tags  போட்டியின் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான அலைபேசிகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் சம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரணதுங்க ராஜபக்ஷ உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் லோட்டஸ் டயர் நிறுவன அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.  

‘நியாயமான விலைக்கு.... நியாயமான தூரம்....’ என்ற எண்ணக்கருவின் ஊடாக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள லோட்டஸ் டயர் அண்மைய காலத்தில் அதிகளவில் பேசப்பட்ட டயர் வர்த்தக நாமமாக விளங்குவதோடு அவர்களுடைய மேலுமொரு சிறப்புமிக்க உற்பத்தியாக செங்கா வர்த்தக நாமத்தில் சந்தைக்கு வந்துள்ள ‘4.50-10’ முச்சக்கர வண்டி டயரை குறிப்பிட முடியும். கொடுக்கும் விலைக்கு உச்ச பட்ச நியாயத்தைப் பெற்றுத் தர வல்ல வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துகின்ற உயர் தரத்திலான லோட்டஸ் டயர் உற்பத்திகள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி டயர்கள் மற்றும் டியூப்கள் ஆகிய பல்வேறு உற்பத்திகளைக் கொண்டுள்ளன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X