2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிங்கர் கொண்டாட்டம் வெற்றிகரமாக நிறைவு

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் சிங்கர் கொண்டாட்டம் என்ற 4 நாள் நிகழ்வை ஏற்பாடு சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சியினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் சிங்கர் நிறுவனம் சந்தைப்படுத்தி வருகின்ற உலகத்தரம் வாய்ந்த 40க்கும் மேற்பட்ட வர்த்தக நாமங்களின் கீழான உற்பத்திகள் இந்த யாழ். சிங்கர் கொண்டாட்ட நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சிங்கர் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் அலைபேசிகள், டெப் (Tab)  சாதனங்கள் போன்ற தனிப்பட்ட பாவனை சாதனங்கள் முதல் வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் சமையலறைச் சாதனங்கள் என பல்வேறு வகையான உற்பத்திகளுக்கு 50% வரையான விலைத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ள 420க்கும் மேற்பட்ட காட்சியறைகள் மற்றும் அதற்கு ஈடாக வியாபித்துள்ள விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு அடங்கலாக, தொடர்ச்சியாக வளர்ச்சிகண்டுவருகின்ற நிறுவனத்தின் வலையமைப்பினூடாக சிங்கர் உற்பத்திகள் கிடைக்கப்பெறுகின்றன.

இலங்கையில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாடானது தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக 'வருடத்துக்கான மக்களின் அபிமானத்தை வென்றெடுத்த மிகச் சிறந்த வர்த்தக நாமம்' என்ற விருதை வென்றுள்ளதன் மூலமாகத் தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X