2025 ஜூலை 26, சனிக்கிழமை

சுசூகி வாகனத்துக்கும் பரிசு

Gavitha   / 2017 மார்ச் 22 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுசூகி மோட்டார் வாகனங்களுடன் இப்புத்தாண்டு பருவக்காலப்பகுதியில் விசேட கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். எப்போதும் தமது வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் சுசூகியிடமிருந்து நீங்கள் கொள்வனவு செய்யும் எந்தவொரு சுசூகி வாகனத்துக்கும் நீங்கள் விரும்பியவாறு தெரிவு செய்து கொள்ளக்கூடிய புத்தாண்டுப் பரிசுகள் 6 ஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் இலவச பதிவு மற்றும் காப்புறுதி, ரூ. 100,000 பெறுமதியான துணைப்பாகங்கள், ரூ. 75,000 பெறுமதியான எரிபொருள் வவுச்சர், ரூ. 75,000 க்கான நிலையான வைப்பு, ரூ.75,000 பெறுமதியான வீட்டுத்தளபாடங்கள் அல்லது மின்சார உபகரணங்களுக்கான வவுச்சர், Ipad mini 4.0 அல்லது iphone ஆகியன அடங்கும். 

22 வருட காலமாக, இந்நாட்டு மக்களின் மோட்டார் வாகன சந்தையில், அதிகளவு விற்பனையாகும் சுசூகி மோட்டார் வாகனங்களில் உலகில் அதிகளவு விற்பனையைப் பதிவு செய்து சாதனைப படைத்துள்ள சுசூகி அல்டோ, சகல வீதிகளுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளதுடன், வாகன நெரிசலில் இலகுவாகப் பயணிக்கக்கூடிய ஒடோ கியர் கட்டமைப்பிலும் அமைந்த அல்டோ K10, சிறந்த தோற்றத்தைக் கொண்ட Wagon R ஹயிபிரிட் வாகனங்களுக்கு நிகரான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் சுசூகி Celerio, மனங்கவர் தோற்றத்தைக் கொண்ட Stingray, ஜப்பானிலும் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்பட்ட சுசூகி Swift, சிறந்த தரத்தைக் கொண்ட Dzire, சொகுசு வாகனங்கள் மத்தியில் முக்கிய ஸ்தானத்தைப் பெற்றுள்ள Ciaz, மோட்டார் வாகன விளையாட்டு சாகசங்களுக்காக பெருமளவு பயன்படுத்தப்படும் Swift sports, குடும்பத்தார் அனைவரும் பயணிக்கக்கூடிய இடவசதிகளைக் கொண்ட Ertiga, சொகுசான Baleno, Vitara SUV வாகனம் போன்ற சுசூகியின் பரந்த வாகனத்தெரிவுகளைப் பார்வையிடவும், முற்பதிவு செய்து கொள்ளவும், கொள்வனவு செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

உலகப்புகழ் பெற்ற சுசூகி மோட்டார் வாகனங்கள் எரிபொருள் சிக்கனம் வாய்ந்தவை என்பது பரிசோதனைகளினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குறைந்த பராமரிப்பு செலவீனங்களையும் கொண்டுள்ளன. சகாயமான விலையில் கொள்வனவு செய்து கொள்ளக்கூடிய சுசூகி மோட்டார் வாகனங்களை மீள விற்பனை செய்யும் போது பெருமளவு தொகையையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X