2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், அடுத்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தரவுள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகும் என Forwardkeys மதிப்பிட்டுள்ளது. 

கொழும்பில் நடைபெற்ற ஆசிய ஹொட்டல் மற்றும் சுற்றுலா முதலீட்டு மாநாட்டின் போது, இந்த மதிப்பீடு வெளியிடப்பட்டிருந்தது. 

சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக, சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்ளும் விமான ஆசனப்பதிவுகள் பற்றிய விவரங்களைக் கவனத்தில் கொண்டு, இந்த எதிர்வுகூறலை Forwardkeys மேற்கொண்டுள்ளது. 

டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்காக விமானப்பதிவுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 3.5% மற்றும்  4.1% அதிகமாகக் காணப்பட்ட போதிலும், பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த எண்ணிக்கை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 9.8% மற்றும் 21.3% சரிவைப் பதிவு செய்துள்ளன.  

ஆனாலும் ஏப்ரல் மாதத்துக்கானப் பதிவுகள் அதிகரித்துக் காணப்படுவதாகவும், இருந்த போதிலும், ஏப்ரல் மாதம் வர இன்னும் நான்கு மாதங்களுக்கு அதிகமான காலம் உள்ளதால், அதில் மாற்றங்கள் இடம்பெறக்கூடும் எனவும் Forwardkeys  அறிவித்துள்ளது. 

2017ஆம் ஆண்டில் ஈஸ்டர் விடுமுறை பிந்தி வருகின்றமை காரணமாக இந்தப் பதிவுகளில் மாற்றங்கள் காணப்படலாம் எனவும் Forwardkeys அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X