Gavitha / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
2014 மற்றும் 2015ம் ஆண்டுகளுக்கான ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருது உட்பட 11 விருதுகளை வென்று பிரண்டிக்ஸ் நிறுவனம் சாதனைப் படைத்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்தி சபை நடத்திய இந்நிகழ்வில் கீர்த்திமிக்க உயர் கௌரவங்களை இந்நிறுவனம் வென்றுள்ளது.
பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விருதுகளை வழங்கி வைத்தார். பிரண்டிக்ஸ் நிறுவனம் தேசிய பொருளாதாரத்துக்கு வழங்கி வரும் அளப்பரியப் பங்களிப்பை அங்கிகரிக்கும் வகையில் இவ் விருதுகள் அமைந்துள்ளன.
ஓட்டு மொத்த அளவில் நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதியாளர், 2014 மற்றும் 2015இல் உயர் தேறிய அந்நியச் செலாவணி உழைத்த நிறுவனம், இதே இரண்டு வருடங்களில் ஆடை உற்பத்தி பிரிவில் உயர் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டிய நிறுவனம், இதே ஆண்டுகளில் ஆடை உற்பத்தி பிரிவில் ஆகக் கூடிய வேலை வாய்ப்புக்களை வழங்கிய நிறுவனம், ஆடை ஏற்றுமதி பிரிவில் அதி உயர் பெறுமானம்சேர் ஏற்றுமதியாளர் என்ற பல பெருமைகளை இந்நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது.
நிலைத்தன்மை அபிவிருத்திக்கான அதி சிறந்த விருதையும் அது வென்றுள்ளது. ஏற்றுமதி விநியோக சங்கிலிக்கு இந்தப் பிராந்தியத்தில் அதிகூடிய பங்களிப்பு வழங்கிய நிறுவனம் ஆகிய விருதுகளை 2014 இல் வென்றுள்ளது குறிப்பிடக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago