Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 11 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் தனது பாரம்பரியத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில், அண்மையில் இடம்பெற்ற பாராட்டு வைபவம் ஒன்றில், 26 நவீன சிங்கர் மடிகணினிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு ஒன்றில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதஸ்மர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வியமைச்சரான அகில விராஜ் காரியவசம் ஆகியோர் மடிக்கணினிகளை இந்த மாணவர்களுக்கு கையளித்து வைத்துள்ளனர். சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சார்பில் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், நிதிப் பணிப்பாளரான லலித் யட்டிவெல மற்றும் டிஜிட்டல் ஊடக துறையின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளரான சஹான் பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில், கலந்துகொண்டனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் 12 இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும், மற்றும் உயர் தர பரீட்சையில் 7 வேறுபட்ட துறைகளில் முறையே முதல் 2 இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும் மடிகணினிகள் வழங்கப்பட்டன. நவீன Intel Core i5, அசல் Windows 10 operating systemஇன் வலுவூட்டலுடன் 7th Generation Processor, 4GB RAM, 1TB Hard Disk, 15.6” HD முகத்திரை, ஒருங்கிணைக்கப்பட்ட HD Web கமெரா, மேம்பட்ட Intel graphics support, Wi-Fi மற்றும் Bluetooth ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை இந்த மடிகணினிகள் கொண்டுள்ளன.
சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ‘எமது நாட்டிலுள்ள இளம் தலைமுறையினர், கல்வி தொடர்பான தமது கனவுகளை முன்னெடுப்பதை ஊக்குவித்து, வாழ்வில் மகத்துவத்தை அடைந்துகொள்வதற்கு வழிகோலுகின்ற தனது பாரம்பரியத்தை சிங்கர் பெருமையுடன் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. பொருத்தமான சாதனங்கள் மற்றும் வளங்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலமாக, அவர்கள் தமது கல்வி சார்ந்த இலட்சியங்களை அடையப்பெற்று, தாங்கள் பெற்றுக்கொண்ட அறிவை சிறந்த முறையில் பயன்படுத்தி, நாட்டின் நலனுக்கு பங்களிப்பார்கள் என நாம் நம்புகின்றோம்,’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago