2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சிறந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக கட்டர்பில்லர் தெரிவு

Gavitha   / 2016 நவம்பர் 22 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்டர் பிரான்ட் தரப்படுத்தலில், சிறந்த சர்வதேச வர்த்தக நாமங்களில் ஒன்றாக கட்டர்பில்லர் ஐ.என்.சி தரப்படுத்தப்பட்டுள்ளது. நிர்மாண வளங்கள், தொழிற்துறை வலு மற்றும் போக்குவரத்து போன்ற மூன்று பிரிவுகளில் இயங்கும் கட்டர்பில்லர், உலகின் 100 சிறந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக, தொடர்ச்சியாக 15ஆவது ஆண்டாகத் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நிரலில் உள்வாங்கப்படுவதற்காக, கட்டர்பில்லர் மூன்று பிரிவுகளில் உயர் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. அவையாவன, வர்த்தக நாமம் பொறிக்கப்பட்டப் பொருட்கள் மற்றும் சேவைகளின் நிதிச்செயற்பாடுகள், வாடிக்கையாளர் தெரிவை செல்வாக்குச்செலுத்தும் வகையில், வர்த்தக நாமம் செயலாற்றியிருந்த விதம் மற்றும் நிறுவனத்துக்கு வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய நிலை அல்லது வர்த்தக நாமத்தின் வலிமை போன்றனவாகும்.  

இந்த ஆண்டின் அறிக்கையானது, “வளர்ச்சிக்கான உடற்கூற்றியல்” என்பதை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. ஒவ்வொரு வர்த்தக நாமத்துக்கும், எதிர்காலத்தில் அவை எவ்வாறு வியாபித்து வளர்ச்சியடையும் என்பதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளித்திருந்தது. இதன் போது, கட்டர்பில்லரும், தனது வர்த்தக நாம உறுதி மொழியான Champion for Your Enduring Success என்பதையும் ஆய்வுகள் மற்றும் விருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க தொடர்ந்து மேற்கொள்ளும் முதலீடுகளையும் உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது. புத்தாக்கம் என்பதில் வாடிக்கையாளர்களின் தேவையை நிவர்த்தி செய்வதில் அறிக்கை காண்பித்திருந்த ஈடுபாடு, இந்த ஆண்டின் அறிக்கை வெற்றிகரமாக இயங்குவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. மேலும், The Age of Smart Iron திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.  

கட்டர்பில்லரின் சர்வதேச ரீதியில் வெற்றிகரமானச் செயற்பாட்டுக்கு கொண்டுள்ள உறுதியான விநியோகஸ்த்தர் வலையமைப்பு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. கட்டர்பில்லர் தயாரிப்புகளுக்கு உள்நாட்டில் விநியோகஸ்த்தராக யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவெட்) லிமிட்டெட் (UTE) திகழ்கிறது. இந்நிறுவனம் இலங்கையின் வெவ்வேறு தொழிற்துறைகளுக்கு ஒப்பற்றப் பொறியியல் தீர்வுகளை வழங்கும் முன்னோடியான நிறுவனமாகத் திகழ்கிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .