Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 08 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளியக வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் World of Outdoor, அண்மையில் நடைபெற்ற SLIA Product Awards & Architect 2017 நிகழ்வில் சிறப்பு விருதை தனதாக்கியிருந்தது. இலங்கை கட்டடக்கலைஞர்கள் கல்வியகத்தினால் SLIA இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Avarna Venturesஇன் முகாமைத்துவ பணிப்பாளர் ஃபஸால் ஃபவுஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'தளபாடங்கள் விற்பனைத்துறையில் பெற்றுக்கொள்ளக்கூடிய உச்ச விருதான இந்த சிறப்பு விருதை நாம் பெற்றுள்ளதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். World of Outdoor என்பது மிகச்சிறந்த வர்த்தக நாமம் என்பதை உறுதி செய்வதுடன், உள்நாட்டு புத்தாக்கத்தின் மீது கவனம் செலுத்துவதுடன், துiயின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்களிப்பு வழங்குவதை உறுதி செய்துள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு பல தெரிவுகளை ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.' என்றார்.
நிறுவனத்தின் உயர் தர நிர்ணயங்கள் மற்றும் கண்கவர் வடிவமைப்புகள் ஆகியவற்றை உறுதி செய்திருந்ததனூடாக இந்த விருதை தனதாக்கியிருந்தது. World of Outdoor என்பது அழகிய, நவீன கண்கவர் தளபாடத் தெரிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. ஈரப்பதன், சூரிய ஒளி மற்றும் கடும் மழை போன்ற கடுமையான காலநிலைகளையும் தாங்கிக்கொள்ளக்கூடிய வகையில், நவீன வாழ்க்கை முறைக்கு பொருந்தும் வகையிலும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறந்த மூலப்பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படும் இந்த தளபாடங்கள் புகழ்பெற்ற “Ceylon Teak’' மற்றும் நீடித்துழைக்கும் '‘Synthetic Rattan’' கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
World of Outdoor இன் வர்த்தக நாம முகாமையாளர் ஜெஹான் நூர் கருத்துத் தெரிவிக்கையில், 'உலகத்தரம் வாய்ந்த, நீடித்துழைக்கும் தளபாடங்களை வழங்குவது எனும் வர்த்தக நாமத்தின் பயணத்துக்கு கிடைத்த சிறந்த கௌரவிப்பாக இந்த விருது அமைந்துள்ளது. எதிர்காலத்திலும் இதுபோன்ற மேலும் பல விருதுகள் எமக்கு கிடைக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்' என்றார்.
World of Outdoor இன் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி ரஸீன் மஹரூஃவ் கருத்துத் தெரிவிக்கையில், 'றWorld of Outdoor என்பது தளபாடங்கள் வியாபாரத்தில் தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. தனது புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் சந்தைகளை விஸ்தரிக்கும் எதிர்பார்ப்புடன் இயங்கிய வண்ணமுள்ளது, அத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்களிப்பை செலுத்திய வண்ணமுள்ளது” என்றார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago