2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

செலிங்கோ லைஃ ப் மேலும் புலமைப்பரிசில்களை வழங்கத்திட்டம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃப் தொடர்ந்தும் தனது 16 ஆண்டாக பிரானாம புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நாட்டின் இளம் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆயுற்காப்புறுதியின் தலைமை செயற்றிட்டத்தின்கீழ் குறித்த விசேட புலமைப்பரிசில் நடைமுறைப்படுத்தப்படும்.

2017 ஆண்டின் முதற்பகுதியில் வழங்கப்படும் இப்;புலமைப்பரிசில் திட்டம் 4 விசேட வகைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் 160 மாணவர்களுக்கு மொத்தமாக 10 மில்லியன் பணத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலுமுள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட செலிங்கோ லை‡ப் கிளைகளின் ஊடாக இப்புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விண்ணப்பத்தை நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.

செலிங்கோ லைசெலிங்கோ லைஃப் தொடர்ந்தும் தனது 16 ஆண்டாகப்பின் பிரானாம புலமைப்பரிசில் திட்டமானது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காகவும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் விசேட திறமையினை வெளிக்காட்டும் மாணவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாக சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களும், க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெற்றவர்கள் மற்றும் தேசிய மட்டத்தில் விளையாட்டு, நாடகம் புத்தாக்கம் ஆகிய துறைகளில் சிறப்பு திறமையை வெளிக்காட்டிய மாணவர்களும் பிரானாம புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவர்களுக்கு விசேட பணப்பரிசில் தொகையும் வழங்கப்படவுள்ளது.இதனடிப்படையில்தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாக சிறந்த பெறுபேற்றைப் பெற்ற 25 மாணவர்களுக்கு 120,000 ரூபாய் பெறுமதியானப் பணப்பரிசில் 5 வருடங்களுக்கும், க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வெற்றிபெற்று குறித்த புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 84,000 ரூபாய் 2 வருடங்களுக்கும் மற்றும் க.பொ.த உயர்தரம் பரீட்சைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 144,000  ரூபாய் பெறுமதியான பணப்பரிசில் 3 வருடங்களுக்கும் வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X