2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

செலிங்கோ லைஃப்பின் பாணந்துறை கிளை

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை நகர மத்தியில் சுற்றாடலுக்கு இசைவான புதிய கட்டடத்தில் செலிங்கோ லைஃவ் தனது புதிய கிளையை அங்குரார்ப்பணம் செய்துள்ளது.  

7,713 சதுர அடி பரப்பு கொண்ட மூன்று மாடி கட்டடமாக இல. 401, காலி வீதி, பாணந்துறை என்ற முகவரியில் அமைந்துள்ளது. சூரிய சக்தி வலு கொண்ட இந்தக் கட்டடம், சக்தி வள ஆற்றல் மிக்க குளிரூட்டல் வசதி, ஒளியூட்டல் வசதி முறை என்பவற்றைக் கொண்டுள்ளது. மழை நீர் சேமிப்புத் திட்டம், மேலும் தோட்ட பராமரிப்புக்காக கழிவு நீர் மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட பாவனைத் திட்டம் என்பவற்றையும் இது கொண்டுள்ளது. இது சக்தி வள பாவனையைக் கணிசமாகக் குறைத்து காபன் வெளியேற்றத்தையும் அதிகளவு குறைக்கின்றது.  

முழு அளவிலான மாநாட்டு மண்டப வசதிகளும் போதிய அளவில் வாடிக்கையாளர் வாகனங்களை நிறுத்தும் வசதிகளும் இங்குள்ளன. சுற்றாடலுக்கு பாதிப்பற்ற வகையில் கட்டடங்களை நிர்மாணிப்பது என்ற அதன் கொள்கைக்கு முற்றிலும் இசைவாக செலிங்கோ லைஃப் இந்தக் கட்டடத்தை வடிவமைத்துள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கெனவே இருந்த மரங்கள் எதையும் தரிக்காமல் இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என கம்பனி அறிவித்துள்ளது.  

செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.ரெங்கநாதன் அண்மையில் இக்கிளையை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். ஒரு வருடத்துக்கு முன் அவரே இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. புதிய சுற்றாடல் இசைவு மாதிரி ஒன்றின் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்புறுதி தலைவர்கள் சுற்றாடல் பாதுகாப்புக்கான தமது அர்ப்பணத்தை வெளிக்காட்டும் வகையில் இத்தகைய மாதிரிகளை தமது புதிய கிளை நிர்மாண கட்டடங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .