Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 24 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் டிக்கிரி Mydoctorஇன் “செனஹச” சிறப்புரிமை அட்டை உரிமையாளர்களின் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிரத்தியேக சலுகைக்காக இணைந்துள்ளது.
Mydoctor.lkஇன் டொக்டர் மலிந்த டி சில்வா, செலான் வங்கியின் முகாமையாளர் - நிறுவனத் தொடர்பாடல் துசித விதாரண மற்றும் முகாமையாளர், சந்தைப்படுத்தல் நளின் கருணாரத்ன ஆகியோரின் முன்னிலையில் Mydoctor.lkஇன் ஸ்தாபகரான கலாநிதி ஹர்ஷ ஜயகொடி, செலான் டிக்கிரி வர்த்தக நாம முகாமையாளரான, திம்மினி சேனாரத்ன உடன் ஒப்பந்தத்தை பரிமாற்றிக் கொண்டார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதான முகாமையாளரான காமிக டி சில்வா, “இலங்கையின் முன்னணி சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரியின் இவ் ஒப்பந்தம் எமது பல வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணவும் வர்த்தக நாமத்தின் செய்தியை பரப்பவும் உதவும்” என்றார்.
செலான் டிக்கிரி அதன் வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய உறவை பேணுவதுடன், வெவ்வேறு நிகழ்வுகள் மூலம் அதன் இளைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்கின்றது. சேமிப்புப் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு புதுமையான கவர்ச்சிகரமான பரிசுகளையும் வழங்குகிறது.
53 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
4 hours ago