2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிலோன் டொபாக்கோ கம்பனியின் பணிப்பாளராக ருக்ஷான் நியமனம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் டொபாக்கோ கம்பனியின் விநியோக தொடர் பணிப்பாளராக கலாநிதி. ருக்ஷான் குணதிலகவை நியமித்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

20 வருட காலத்துக்கு மேலான முன் அனுபவத்தைக் கொண்டுள்ளருக்ஷான், பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனத்தின் வலையமைப்பில் வௌவேறு சந்தைகளில் பணியாற்றியுள்ளார். நிறுவனத்தின் பயிர்ச்செய்கை முதல் நுகர்வோரைச் சென்றடையும் வரையான விநியோகத் தொடர் வலையமைப்பில் பெருமளவு பங்களிப்பை வழங்குவார் என நிறுவனம் எதிர்பார்க்கின்றது.  

ருக்ஷான் தனது தொழில் வாழ்வை, நெஸ்லே லங்காவில் ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஹிங்குரான சீனி தொழிற்சாலை மற்றும் தலவாக்கலை பிளான்டேஷன் ஆகியவற்றில் பணியாற்றியிருந்தார். சிலோன் டொபாக்கோ கம்பனியில் முகாமைத்துவ பயிலுநராக இணைந்து கொண்டார். இவரின் திறமையானச் செயற்பாட்டுக்கு துரித கதியில் கௌரவிப்பை வழங்கியிருந்த நிறுவனம், இலைகள் செயற்பாடுகள் பிரிவின் தலைமை அதிகாரியாகப் பதவி உயர்வை வழங்கியிருந்தது. இந்தப் பதவியில் இவர் 3 வருட காலம் பணியாற்றியிருந்ததுடன், இதனைத் தொடர்ந்து சர்வதேச மட்ட பதவியைப் பெற்றுச் சென்றிருந்தார்.

BATஇல் பணியாற்றிய காலப்பகுதியில், உற்பத்தித்திறன் தொடர்பான புத்தாக்கங்கள் மற்றும் சந்தை செயற்பாடுகள் தொடர்பில் ருக்ஷான் கவனம் செலுத்தியிருந்ததுடன், இலைகள் செயற்பாடுகள் முகாமையாளர் பதவியை வியட்நாமிலும், இலைகள் பணிப்பாளர் பதவியை உசபெகிஸ்தானிலும், ஆசிய பிராந்தியத்துக்கானப் பிராந்திய விவசாய வர்த்தக முகாமையாளராக மலேசியாவிலும் பணியாற்றியிருந்தார்.

இவர் விவசாய பொருளியலில் முதுமானிப்பட்டத்தைக் கொண்டுள்ளதுடன், விவசாய கற்கைளில் PhD பட்டத்தையும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர், சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தின் பீட பணிப்பாளர் சபை அங்கத்தவர் என்பதுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஜயம் செய்யும் விரிவுரையாளராகவும் செயலாற்றியிருந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X