2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சூழல்நட்புறவான தரையோடுகளுக்காக மெக்டைல்ஸூக்கு தங்க விருது

Princiya Dixci   / 2016 நவம்பர் 10 , மு.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்டைல்ஸ் லங்கா பிரைவெட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு, அண்மையில் நடைபெற்ற “இலங்கை பசுமை விருது இரவு” நிகழ்வின் போது தங்க நியமத்தைக் கொண்ட “CIOB பசுமைக் குறியீட்டு விருது” வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கட்டடவாக்கம் மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த தொழில்வாண்மையாளர்களின் முதன்மையான தொழில்சார் அமைப்பான, இலங்கை கட்டட நிர்மாணிப்பாளர்கள் நிறுவகத்தினால் (CIOB) இவ்விருது வழங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

“எமது உற்பத்திகளின் ஊடாக நாம் மேற்கொள்வதைப் போன்ற அதேமாதிரியான புத்தாக்க அணுகுமுறையையே நாம் சூழல் விடயத்திலும் முன்கொண்டு செல்கின்றோம். அதன் பிரகாரம், நாம் தயாரிக்கின்ற உற்பத்திகளுடன் பின்னிப்பிணைந்துள்ள பேரார்வத்துக்ககாக ‘‘CIOB பசுமைக் குறியீடு விருது” கிடைப்பதையிட்டு நாம் மிகவும் கௌரவமும் பெருமிதமும் அடைகின்றோம். வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் சூழல் நட்புறவுத் தன்மை ஆகியவற்றை மனதில் வைத்தே எமது அனைத்து உற்பத்திகளும் தயாரிக்கப்படுகின்றன. மேலும் முன்னேற்றம் அடைவதற்காக நாம் மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளின் பலனாக இந்தத் தங்க நியமத்தைப் பெற்றுக் கொள்வதையிட்டு நாம் பெருமையடைகின்றோம். மெக்டைல்ஸ் உற்பத்திகளைத் தேர்ந்தெடுக்கின்றமைக்காகவும் அதேபோன்று ஒரு நிலைான  எதிர்காலத்தை நோக்கிப் பசுமையான, அடிப்படையில் முன்னேறிச் செல்லும் பொருட்டு எமக்கிடையிலான உறவை பலப்படுத்துகின்றமைக்காகவும் நாம் எமது விசுவாம்சமிக்க வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறுகின்றோம்” என்று மெக்டைல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிம்மெர் மில்பர் தெரிவித்தார்.  

“CIOB பசுமை விருது கிடைக்கப் பெற்றுள்ளமையானது, மெக்டைல்ஸ் நிறுவனம் இதுகாலவரை அடைந்து கொண்டுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைற்கற்களுள் ஒன்றாகும். எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்காக சந்தையில் மிகச் சிறந்த தராதரமுடைய பொருட்களை உற்பத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக மெக்டைல்ஸ் நிறுவன அணியினர் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு இது ஒரு அங்கிகாரமாகக் காணப்படுகின்றது. சூழல் நட்புறவுமிக்க நிறுவனமாகத் திகழ்வதை நோக்கியதான உலகளாவிய போக்கினைப் பலப்படுத்துவதற்கான கம்பனியின் அர்ப்பணிப்புக்கு, இச்சான்றளிப்பு இன்னுமொரு அத்தாட்சியாகவும் உள்ளது. இப் பிராந்தியத்தில் வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உற்பத்திகளை வழங்கும் தரையோடுகள் வழங்குநராகத்  திகழ்தல் என்ற கம்பனியின் குறிக்கோளுக்கு கிடைத்த ஓர் அங்கிகாரமாகவும் இது அமைந்துள்ளது.  

எமது நிறுவனம் வாடிக்கையாளர்களை மையாகக் கொண்ட ஊக்கமுள்ள, திறனுள்ள தொழில்வாண்மையாளர்கள் அணி ஒன்றின் பக்கபலத்துடன் இயங்குகின்ற அதேவேளை, மிகவும் முன்னேற்றகரமான தன்னியக்க இத்தாலிய உற்பத்தியாக்கல் வசதிகளைப் பயன்படுத்தி, ஒரு புத்தாக்க அணுகுமுறையைக் கையாண்டதன் ஊடாக இலங்கையில் தரையோடுகள் (tiles) துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியவரான பொது முகாமையாளர் தாஜித பெரேரா மேற்படி அணிக்குத் தலைமை தாங்குகின்றார்” என்று மில்பர் மேலும் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .