Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு மதுபானம் இறக்குமதி செய்யப்படுகின்றமையால், இலங்கை அரசாங்கத்துக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக இந்தத் தொகை பயன்படுத்தப்பட முடியும் என அறிவித்துள்ள அரசாங்கம், இந்த சட்ட விரோதமான இறக்குமதி மற்றும் பதுக்கல் முறையிலான விற்பனைகளை
முறியடிப்பதற்கு பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.
நிதி அமைச்சரின் பணிப்புரையின் பேரில், இது போன்ற சட்ட விரோதமான செயற்பாடுகளை முறியடிப்பதற்காக விசேட போதைப்பொருட்கள் சுற்றிவளைப்பு பிரிவு நிறுவப்பட்டுள்ளது. கடந்த வாரம் இது போன்ற சட்ட விரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை தெமட்டகொட பகுதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததாக இந்த அமைப்பு தெரிவித்தது.
இவ்வாறான சட்ட விரோதமான முறையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பற்றி தமக்கு தொடர்ந்து விவரங்கள் இரகசியமான முறையில் கிடைத்த வண்ணமுள்ளதாகவும், இந்த சட்ட விரோதமான மதுபான இறக்குமதி மற்றும் விற்பனை பற்றி தகவலறிந்தால் 0112 484500, 0112 484600 மற்றும் 0112 484700 எனும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் விசேட போதைப்பொருட்கள் சுற்றிவளைப்பு பிரிவு அறிவித்துள்ளது.
19 minute ago
21 minute ago
49 minute ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
49 minute ago
18 Sep 2025