Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 04 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சதாஹரித பிளான்டேஷனின் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு, நிபுணத்துவம் வாய்ந்த சந்தைப்படுத்தல் தகைமையை வழங்குவதற்கு SLIM உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக சதாஹரித பிளான்டேஷன்ஸ் அறிவித்துள்ளது.
2017/2018 காலப்பகுதியில், ஒரு பில்லியன் ரூபாய்க்கு அதிகமான வருமானத்தை எய்தியிருந்தமையை கௌரவிக்கும் வகையில், சதாஹரித பிளான்டேஷன் நிறுவனத்தால் இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் SLIM தலைவர் பிரதீப் எட்வர்ட் மற்றும் சதாஹரித பிளான்டேஷன் தலைவர் சதிஷ் நவரட்ன ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர். இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், சதாஹரித பிளான்டேஷன்ஸ் லிமிட்டெடின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஊழியர்களுக்கு PCM (சந்தைப்படுத்தலில் ஆரம்ப நிலை சான்றிதழ்) தகைமை வழங்கப்படும்.
அத்துடன், இரத்மலானையில் அமைந்துள்ள நிறுவன வளாகத்தில் இந்தக் கற்கைநெறி முன்னெடுக்கப்படும். சதாஹரித பிளான்டேஷன்ஸ் அங்கத்தவர்களுக்கு சந்தைப்படுத்தலில் SLIM இடமிருந்து திறன்கள் மற்றும் அறிவை பெற இந்தக் கற்கை சிறந்த வாய்ப்பை வழங்குவதாக அமைந்திருக்கும்.
இந்நிகழ்வில் சதாஹரித பிளான்டேஷன்ஸ் தலைவர் சதிஷ் நவரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய உலகில் காணப்படும் மாபெரும் சவாலாக, சரியான நபர்களைத் தெரிவு செய்து, நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை எய்தக்கூடிய வகையில், அவர்களைத் தயார்படுத்துவது என்பது அமைந்துள்ளது.
இந்தக் கற்கை நெறிக்கு எமது விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஊழியர்களை வெளிப்படுத்துவதனூடாக, அவர்களின் திறன்கள், அறிவு, அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம். இதனூடாக அவர்களுக்கு எமது உறுதிமொழியை வாடிக்கையாளர்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும். இதனூடாக அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக அமையும்” என்றார்.
சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் பணிப்பாளர் ஜயம்பதி மிரான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “வியாபாரப் பிரிவு விரிவாக்கமடையும் போது, நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவும் விரிவடைகிறது. இதனூடாக திறன் வாய்ந்த ஊழியர் என்பவர், தொழில் வழங்குநருக்குப் போட்டிகரமான அனுகூலத்தை வழங்குவதாக அமைந்திருப்பார். இலங்கையில் சந்தைப்படுத்தல் துறையின் வழிகாட்டி எனும் வகையில், SLIM இனால் நிறுவனங்களுக்காக மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்த கற்கைகளை வழங்கக்கூடிய ஆற்றல் காணப்படுகிறது. எமது ஊழியர்களை PCM கற்கை ஊடாக புதிய முறையில் சிந்திக்கக்கூடிய வகையில் தயார்படுத்தும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago