Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம் மாவட்டத்தின் கஹட்டகஸ்திலியவிலுள்ள அம்பகஹா வாவி மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் திவுலங்கடவல, மெதிரிகிரியவிலுள்ள தன்யாவ வாவி ஆகியன சம்பத் வங்கியினால் புனரமைப்புச் செய்யப்பட்டு, உள்ளூர் மக்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டன.
சம்பத் வங்கி வங்கிக்கிளைகள் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளரான துசித நாகந்தல, ஒக்டோபர் 30ஆம் திகதியன்று குளங்களை வைபவரீதியாக கையளித்து வைக்கும் நிகழ்வுக்குத் தலைமை வகித்துள்ளதுடன், அரசாங்க அதிகாரிகள், உள்ளூர் விவசாயிகள் சங்கங்களின் அங்கத்தவர்கள், சம்பத் வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் மற்றும் அக்கிராமவாசிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இந்த இரு மாவட்டங்களிலும் விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளோர் பிரதானமாக நீர்ப்பாசன முறைமையை நம்பியுள்ள நிலையில், அங்கே 152 ஏக்கர்கள் வரையான நிலப்பரப்பில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள 170க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்ள, புனரமைப்புச் செய்யப்பட்ட அம்பகஹ வாவி மற்றும் தன்யாவ வாவி ஆகியன கைகொடுக்கும்.
இத்தகைய முழுமையான நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்திச் செயற்றிட்டத்தை வழிநடாத்தும் சம்பத் வங்கி, மின்னேரிய நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம், அனுராதபுரம் கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் உள்ளுர் வாசிகள் ஆகியோரின் ஒத்தாசையுடன் முத்தரப்பு அணுகுமுறையைக் கைக்கொண்டு, ‘Wewata Jeewayak’ என்ற தனது பிரதான சமூக நலன்புரிச் செயற்றிட்டத்தின் கீழ் இந்த இரு குளங்களையும் புனரமைப்புச் செய்யும் பணிகளை முன்னெடுத்திருந்தது.
ஒத்த சிந்தனையைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் உரிய நிர்வாக அதிகார சபைகளுடன் கிராமிய சமூகத்திற்கிடையிலான உறவுப்பாலத்தை ஏற்படுத்தவும் வங்கி உதவியுள்ளது. மேலும், கஹட்டகஸ்திலிய ஆரம்ப பாடசாலையில் கணினி ஆய்வுகூடம் மற்றும் My doc அலகு ஆகியவற்றை ஏற்படுத்தவும் சம்பத் வங்கி உதவியுள்ளதுடன், தன்யாவவிலுள்ள 225 குடும்பங்கள் மற்றும் 2,100 பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago