2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சம்பத் வங்கியின் ‘ஐந்தாம் தர புலமைப்பரிசில்’ கருத்தரங்குகள்

Editorial   / 2018 ஜூன் 08 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து நான்காவது  ஆண்டாகவும் ‘ஐந்தாம் தரப் புலமைப்பரிசில்’ தொடர் கருத்தரங்குகளைச் சம்பத் வங்கி ஆரம்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தம்மைத் தயார்படுத்துவதற்கு வழிகாட்டியாக உதவும் முகமாக, இத்தொடரின் முதலாவது கருத்தரங்கு, மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து, அடுத்த கட்டங்களில் அனுராதபுரம், எம்பிலிப்பிட்டிய, பதுளை, கொழும்பு, குருணாகல், பாணந்துறை ஆகிய இடங்களிலும் கருத்தரங்குகள் வெகு விரைவில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன.  

தமது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பானதாக அமைவதற்காக பெற்றோர் தமது வாழ்வைத் தியாகம் செய்கின்றனர். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. சம்பத் வங்கி, மகரகமவில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். பிரபல ஆசிரியர் சரத் ஆனந்த இக்கருத்தரங்கை நடாத்தியதுடன், மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகள்,  வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.  

பரீட்சை நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு, பரீட்சை தொடர்பில் தேவையற்ற மனப்பயங்களைப் போக்கும் வகையில், சரத் அலவத்துர நடாத்திய பயிற்சி வழிகாட்டல், தயார்படுத்தல் அறிவுரைகள், நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடமிருந்து பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தன. வசதிகள் குறைந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள், தேசிய பாடசாலைகளில் இணைந்து, தமது கல்வியை முன்னெடுப்பதற்கான ஒரு நுழைவாயிலாகத் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை அமைந்துள்ளது. 

இந்நாட்டில் உள்ள சிறுவர்களை, நாட்டின் எதிர்காலத்தை வழிநடாத்திச் செல்லும் பொறுப்பைக் கையிலெடுக்கும் திறமை கொண்டவர்களாக வளர்த்து, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனேயே சம்பத் வங்கி ‘ஐந்தாம் தர புலமைப்பரிசில்’ கருத்தரங்கை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .