2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சம்பத் வங்கியின் கருத்தரங்கு

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்றுறைப் பிரிவின் பிரதிநிதிகளுக்கு, சம்பத் வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற இடைத்தொடர்பாடல் கருத்தரங்கான “Obe Diyunuwata Ape Maga Penweema” வரிசையில் மற்றுமொரு கருத்தரங்கு அண்மையில் குருநாகல் கன்டியன் றீச் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் சிறிய, நடுத்தர அளவிலான தொழிற்றுறை, கூட்டாக முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, அவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில், தொழிற்றுறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர், உள்நாட்டு சிறிய, நடுத்தர அளவிலான தொழிற்றுறையின் பிரதிநிதிகளை ஒன்றுகூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற இக்கருத்தரங்கின் வரிசையில், ஐந்தாவது கருத்தரங்காக இது அமைந்துள்ளது.

யோத்யா இத்தவல பெரேரா, நிகழ்வில் கலந்துகொண்ட தொழிற்றுறைப் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போது, “சிறிய, நடுத்தர அளவிலான தொழிற்துறைகள் இந்நாட்டின் அபிவிருத்திக்கு மகத்தான அளவில் பங்களிப்பாற்றி வருகின்றன. இதனால், ஆரம்பத்திலிருந்தே இத்தொழிற்துறைக்கு சம்பத் வங்கி தனது ஆதரவை வழங்கி வந்துள்ளதுடன், அவர்கள் தமது வர்த்தக முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதியுதவிகளையும் வழங்கி வந்துள்ளது. நாம் தற்போது நாடளாவியரீதியில் விஸ்தரித்து வருகின்ற இச்செயலமர்வுகள் இந்த வகையில் நாம் முன்னெடுக்கும் மற்றுமொரு படியாக அமைந்துள்ளது. எமது தேசத்தின் அபிவிருத்திக்கு உதவுவதில் இந்த சிறிய, நடுத்தர அளவிலான தொழிற்துறையை சார்ந்த வர்த்தகர்களின் முயற்சிகள், அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக  அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எமது வங்கியின் சார்பில்  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்”  என்று குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .