2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சவால்களுக்கு மத்தியிலும் SLT குழுமம் தேசத்துக்கு பெறுமதி சேர்ப்பு

S.Sekar   / 2022 மே 23 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமம் (SLT குரூப்), 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 26 பில்லியன் வருமானத்தை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 5.4% உயர்வானதாகும். முதல் காலாண்டில் குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 2.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலிலும் குழுமத்தின் மீண்டெழுந்திறன திறனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. புதுவருடத்தின் ஆரம்பத்திலும் டிஜிட்டல் மாற்றியமைப்புத் திட்டங்கள் தொடர்பில் குழுமம் கவனம் செலுத்தியிருந்ததுடன், பங்காளர்கள் மற்றும் தேசத்துக்கு பெறுமதி சேர்ப்பது மற்றும் செயன்முறைகளை தன்னியக்க மயப்படுத்துவது போன்றவற்றிலலும் கவனம் செலுத்தியிருந்தது.

SLT குழுமத்தின் EBITDA (வரிக்கு முன்னரான வருமதிகள், வரி, மதிப்பிறக்கம் மற்றும் ஒதுக்கங்கள்) பெறுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.9% உயர்ந்து ரூ. 10.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. EBITDA எல்லைப் பெறுமதி இக்காலாண்டில் 41% இனால் அதிகரித்துள்ளது. காலாண்டில் குழுமத்தின் வரிக்கு முந்தைய இலாபம் (PBT) ரூ. 3.5 பில்லியனாக பதிவாகியிருந்தது.

குழுமத்தின் வருமானம் பிரதானமாக புரோட்பான்டினூடாக ஈட்டப்பட்து . இதை சாதிப்பதில் தேசிய ஃபைபர்மயமாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் Fibre விரிவாக்கல் திட்டத்தினூடாகவும், 4G/LTE வலையமைப்புகளின் விரிவாக்கங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் போன்றவற்றினூடாகவும் பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. ஃபைபர் மயமாக்கலின் மீதான முதலீடுகள் மற்றும் ஃபைபர் தீர்வுகளை சந்தைப்படுத்துவது துரிதப்படுத்தப்பட்டிருந்தமை போன்றன முதல் காலாண்டு பெறுமதிகளை எய்துவதில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. அதிகளவு நுகர்வோர் கேள்வியும் நிலவியிருந்தது. மேலும் ஃபைபர் விரிவாக்கத் திட்டத்தினூடாக, PEOTV வருமானத்திலும் அதிகரிப்பை குழுமம் அவதானித்திருந்தது. இக்காலப் பகுதியில் சேவை வழங்குநர் உள்ளக சேவைகளினூடாக வருமானமும் (Carrier Domestic Revenue)அதிகரித்திருந்தது.

SLT குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பெருமளவு சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது, எவ்வாறாயினும், SLT-MOBITEL இன் ஒட்டுமொத்த பெறுபேறுகள் மீட்சியையும் உறுதித் தன்மையையும் வெளிப்படுத்தியிருந்தன. 2022 ஆம் ஆண்டில், சகல பங்காளர்களுக்கும் பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்க நாம் எதிர்பார்ப்பதுடன், டிஜிட்டல் பாகுபாட்டை இல்லாமல் செய்து, தேசத்துக்கும் எமது மக்களுக்கும் ஆதரவளிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். கடும் நிதிசார் ஒழுக்கம் என்பது எமது வெற்றிகரமான செயற்பாட்டில் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.” என்றார்.

குழுமத்தின் தொழிற்பாட்டு பணப் பாய்ச்சல்கள் முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 35.3% இனால் அதிகரித்து ரூ. 16.3 பில்லியனாக பதிவாகியிருந்தது. காலாண்டின் இறுதியின் குழுமம் பணம் மற்றும் பணத்துக்கு நிகரான சாதகமான பெறுமதிகளாக ரூ. 31.6 பில்லியனை பதிவு செய்திருந்தது. முதல் காலாண்டில் அரசாங்கத்துக்கு SLT குழுமத்தின் பங்களிப்பு ரூ. 4.2 பில்லியனாக காணப்பட்டது. நேரடி மற்றும் மறைமுக வரிகளினூடாக இந்தப் பங்களிப்பு எய்தப்பட்டிருந்தது.

குழுமத்தின் தாய் நிறுவனமான, ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT), வரிக்கு பிந்திய இலாபமாக முதல் காலாண்டில் ரூ. 4.1 பில்லியனை பதிவு செய்திருந்தது. காலாண்டில் வருமானம் ரூ. 15.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. EBITDA மற்றும் தொழிற்பாட்டு இலாபங்கள் ரூ. 6.3 பில்லியன் மற்றும் ரூ. 1.1 பில்லியனாக பதிவாகியிருந்தன.

குழுமத்தின் மொபைல் சேவைகள் பிரிவான மொபிடெல் (பிரைவட்) லிமிடெட், 2022 இன் முதல் காலாண்டில் ரூ. 11.6 பில்லியனை வருமானமாக பதிவு செய்திருந்தது. EBITDA மற்றும் தொழிற்பாட்டு இலாப எல்லைப் பெறுமதிகள் 38.9% மற்றும் 19.3% ஆக காணப்பட்டன. நிறுவனத்தின் வருமானத்தில் அந்நியச் செலாவணி இழப்புகள் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், காலாண்டில் ரூ. 0.8 பில்லியன் தேறிய நட்டம் பதிவாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X